கள்ளக் காதலன் வச்சிக்கங்க! டாக்டர் அட்வைஸ்! சின்மயி பகீர் தகவல்!

கள்ள உறவு வைத்துக் கொள்ளுமாறு அறிவுரை கூறிய மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சின்மயி கோரிக்கை விடுத்துள்ளார்.


திரையுலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை வெளிச்சம் போட்டு காட்டுவதற்காக தொடங்கப்பட்ட மீடூ என்ற பிரச்சாரத்தை தமிழகத்தில் முன்னெடுத்தவர் பாடகி சின்மயி. கவிப்பேரரசு வைரமுத்துக்கு எதிராக அவர் பாலியல் புகார் கொடுத்தார்.  இது தமிழ் திரையுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆனால் இது எடுபடாமல் போன நிலையில், தற்போது பெண்களுக்கு நேரும் பாலியல் வன்முறைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். அவருக்கு தற்போது ஒரு பெண் ஒருவர் எழுதியிருந்த கடிதத்தில், மனோதத்துவ நிபுணரிடம் சென்றதாகவும் தனது குடும்ப சூழ்நிலை குறித்து கூறிய போது, கள்ள உறவு வைத்துக் கொள்ளுமாறு அவர் அறிவுரை தெரிவித்ததாகவும் கூறியதை சின்மயிக்கு அந்த பெண் பகிர்ந்திருந்தார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சின்மயி, மனோதத்துவ நிபுணரின் இந்த அறிவுரையானது நியாயமானதா இன்று மருத்துவ நிபுணர்களும் மனநல ஆலோசகர்களும் பதிலளிக்குமாறு கூறியுள்ளார். மேலும் இந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்பதற்கான சட்ட நுணுக்கங்களையும் அவர் கேட்டுள்ளார்.