மேடையில் அரைகுறை ஆடையில் ஆண்களை சூடேற்றி கெட்ட ஆட்டம்! சப்னா சவுத்ரிக்கு பிறகு நேர்ந்த விபரீதம்!

மேடையில் ஆபாச நடனமாடி, முகம் சுழிக்கும் வகையில் நடந்துகொண்டதாக, பாடகி மற்றும் டான்சரான சப்னா சவுத்ரி மீது புகார் கூறப்பட்டுள்ளது.


ஹரியானாவைச் சேர்ந்த சப்னா சவுத்ரி பாடகி மற்றும் டான்சர் ஆவார். இவர், கவர்ச்சியான பாடல்களைப் பாடி மேடையில் ஆடுவதும் வழக்கம். இதன்படி, சமீபத்தில் மொரதாபாத் பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், மேடையில் ஆபாச நடனமாடி, முகம் சுழிக்கும் வகையில் சப்னா சவுத்ரி நடந்துகொண்டார்.

இதனால் கலவரம் ஏற்படக்கூடிய சூழல் நிலவியது என்றும், ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அடிக்கடி சப்னா சவுத்ரி இத்தகைய செயலை செய்வதால், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்த நபர் வலியுறுத்தியுள்ளார்.

மொரதாபாத்தில்  சமீபத்தில் மாவட்ட வேளாண் மற்றும் தொழில்துறை சார்பான கண்காட்சி ஒன்றில் பங்கேற்ற சப்னா சவுத்ரி, ஆபாச நடனமாடியுள்ளார். இதைப் பார்ப்பதற்காக, ஏராளமான ரசிகர்கள் காவல் தடுப்புகளை உடைத்து தள்ளிவிட்டு, முன்னேறி சென்றனர். இதையடுத்தே, அவர் மீது போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.