கேட்க கூடாததை கேட்ட கணவன்! மகள் முன்னிலையில் மனைவி அரங்கேற்றிய கொடூரம்!

சிங்கப்பூரில் விவாகரத்து கேட்ட கணவனை, மனைவியே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கொலைசெய்யபட்ட  நபர் கடந்த  2006ம் ஆண்டு இந்தியாவில் இருந்து  சிங்கப்பூரில் வேலைக்குச் சென்றவர்  பின்னர், தனது மனைவி, மகளையும் அங்கே அழைத்துச் சென்று சுமூகமாக வாழ்ந்துவந்துள்ளார். இந்நிலையில், சமீப நாட்களாக, வேலைப்பளு காரணமாக, கணவர் வீட்டிற்கு இரவில் தாமதமாக வர நேர்ந்துள்ளது மேலும் இதனால் அவரது மனைவி கடும் அதிருப்தியில் இருந்துள்ளார். 

இதன்பேரில் இருவருக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. இதையடுத்து, விவாகரத்து செய்யலாம் என்று அந்த நபர், மனைவியிடம் கூறியுள்ளார். மேலும், மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, கனடா சென்று செட்டில் ஆகப் போவதாகவும், அந்த நபர் சிலரிடம் கூறிவந்திருக்கிறார். 

இதனால், ஆத்திரம் அடைந்த அவரது மனைவி, சம்பவத்தன்று இதுபற்றி அவரிடம் கேட்க, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் உறங்கச்சென்ற நிலையில், திடீரென அதிகாலை 5 மணிக்கு, தனது கணவனை, அவர் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டாராம். இதனை நேரில் பார்த்த அவரது மகள் போலீஸ்க்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் விரைந்து வந்து கணவனின் சடலத்தை மீட்டனர்.

இதற்கிடையே, அந்த பெண் தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இருந்தாலும், அவரை மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், உயிருடன் காப்பாற்றியுள்ளனர்.