சிங்கம் அண்ணாமலை! கர்நாடகாவை கலக்கிய தமிழ் போலீஸ் எடுத்த பகீர் முடிவு!

கர்நாடக மாநிலத்தில் கலக்கி வந்த தமிழகத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் அண்ணாமலை பதவி விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.


தமிழகத்தின் கரூரைச் சேர்ந்த வர் அண்ணாமலை. 2013ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற இவர் கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் துணை மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். 2015ஆம் ஆண்டு உடுப்பி எஸ்பி ஆக பதவி உயர்வு பெற்ற அண்ணாமலை அப்போது முதல் இன்றுவரை அம்மாநில மக்களை கவர்ந்தவர்.

துணிச்சலான நடவடிக்கைகள் மூலமாக ரவுடிகள் கொட்டத்தை அடக்கிய அண்ணாமலை தற்போது பெங்களூரு தெற்குப் பகுதியின் இணை ஆணையராக உள்ளார். சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வதால் இவரை சிங்கம் அண்ணாமலை என்றுதான் கர்நாடகாவில் அழைப்பார்கள். அப்படிப்பட்ட அண்ணாமலை தான் போலீஸ் வேலையில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்து அனைவரையும் அதிர வைத்துள்ளார். கடந்த ஆண்டு தனது நண்பர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த பிறகு வாழ்க்கை தொடர்பான தனது எண்ணம் மாறி விட்டதாகவும் மானசரோவர் யாத்திரை சென்று திரும்பிய பிறகு போலீஸ் பணியில் தொடர விரும்பவில்லை என்று கூறி அனைவரையும் மிரள வைத்துள்ளார் அண்ணாமலை.

போலீஸ் வேலை பிடிக்காமல் தான் விலகவில்லை என்றும் வாழ்க்கையை வேறு வழியில் வாழ வேண்டும் என்று விரும்பி தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார் அண்ணாமலை. காவல் இணை ஆணையர் எனும் உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் திடீரென பதவி விலகி இருப்பதே அதிகாரிகள் மட்டுமல்லாமல் அரசியல்வாதிகளையும் அதிரவைத்துள்ளது. அடுத்து என்ன செய்வது என்று தன் முடிவு எடுக்கவில்லை என்றும் மூன்று நான்கு மாதங்களுக்குப் பிறகே வாழ்க்கையின் அடுத்த கட்டம் குறித்து யோசிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார் அண்ணாமலை.

பெங்களூரில் மட்டுமல்லாமல் கர்நாடகாவின் உடுப்பி ராமநகரம் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றிய காலம் முதல் மாவட்ட மக்களின் அன்பைப் பெற்றவர் சிங்கம் அண்ணாமலை. பணியாற்றிய காலத்தில் சிறிய புகாருக்கு கூட ஆளாகாமல் நேர்மையாகவும் துணிச்சலாகவும் செயல்பட்டதால் அவர் பதவி விலகக் கூடாது என்று முதலமைச்சராக இருக்கும் குமாரசாமி உள்ளிட்ட அனைவரும் கேட்டுக் கொண்டனர். ஆனாலும் பதவி விலகுவது உறுதி என்று கூறி கர்நாடகம் சோகத்தில் ஆழ்த்திவிட்டு தமிழகம் திரும்புகிறார் அண்ணாமலை.

இதனிடையே அண்ணாமலையின் குடும்பத்தினர் கரூர் மாவட்டத்தில் முக்கிய அரசியல் கட்சி ஒன்றில் தீவிரமாக செயல்படும் என்றும் அண்ணாமலையும் அரசியலில் ஈடுபட்டு வேலையை உதறிவிட்டு வருவதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.