சிங்க நடை! வைரலாகும் ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்! எங்க எடுத்தது தெரியுமா?

நடிகர் ரஜினியின் சிங்க நடை புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


ஸ்டைல் என்றால் அது ரஜினி தான். வயதானாலும் ரஜினியின் ஸ்டைல் எப்போதும் குறைந்ததே இல்லை. அதே போல் ரஜினியின் நடை எப்போதுமே மாஸ் தான்.

வயது 60ஐ கடந்த நிலையிலும் ரஜினியின் நடையில் இருக்கும் வேகம் அசாத்தியமானது. இந்த நிலையில் ரஜினி வேகமாக சிங்க நடை போட்டு நடக்கும் புகைப்படம் ஒன்று வைரல் ஆகி வருகிறது.

கருப்பு உடையில் ரஜினி நடந்து வரும் இந்த புகைப்படம் ரஜினி ரசிகர்களை விசில் அடிக்க வைத்துள்ளது. மேலும் இந்த புகைப்படத்தை பலரும் தங்கள் டிபியாக சமூக வலைதளங்களில் மாற்றி வருகின்றனர்.

இந்த புகைப்படம் புதிது இல்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. ராகவேந்திரா மண்டபத்திற்கு சென்ற போது ரஜினியை இந்த புகைப்பட கலைஞர் எடுத்துள்ளார். அது தான் தற்போது வைரல் ஆகி வருகிறது.