பெரும்பாலான நபர்கள் தங்கள் வாழ்நாளில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கீழ் முதுகு வலியை நிச்சயம் அனுபவித்திருப்பார்கள்.
கீழ் முதுகு வலியால் உயிரே போகிறதா..? இதோ சிம்பிள் நிவாரணம்!
எல்லோருக்கும் எப்போதும் கீழ் முதுகு வலி கஷ்டமானதாகவோ ஆபத்தானதாகவோ இருப்பதில்லை. ஒரு சில நாட்களில் அல்லது சில வாரங்களில் தானாகவே சரியாகி விடும். ஆனால், கீழ் முதுகு வலி நீண்ட நாட்கள் நீடிக்கும்போது, மருத்துவ பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன், போன்றவை அவசியம். மேலும் பிஸியோதெரபிஸ்ட் ஆலோசனை பெறுவதும் நல்லது.
கீழ் முதுகு வலி எதனால் ஏற்படுகிறது? முக்கியமான காரணம் தவறான உடல்சமநிலையில் (POSTURE) நீண்ட நேரம் உட்கார்வது, கம்யூட்டரில் அமர்ந்து அதிக நேரம் வேலை பார்ப்பது, அதிக எடையை தூக்குவது, விபத்து போன்றவை ஆகும்.
அடுத்ததாக முதுகு தண்டுவட தட்டுகளில் ஏற்படும் கோளாறுகள் (DISC PROLAPSE), எலும்பு முறிவு, முதுகு தசைகளில் ஏற்படும் பாதிப்பு, தட்டுகளில் நரம்பு அழுத்தம் போன்ற காரணங்களினாலும் கீழ் முதுகு வலி ஏற்படும். இது போன்ற வலி இருக்கும் போது வலியானது, இடுப்பு மற்றும் கால்களிலும் பரவும், குனியும் போது அதிகவலி ஏற்படும், முதுகு தண்டு வடம் இருக்கமாக இருக்கும், நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்க முடியாது.
இது போன்ற வலியை பிஸியோதெரபி முறையில் எளிதாக சரிபடுத்த முடியும். உடலை சமநிலைப்படுத்த ஆலோசனை (POSTURE CORRECTION), ELECTROTHERAPY TREATMENT, உடற்பயிற்சி போன்றவை அளிக்கும் போது சில நாட்களில் சரியாகி விடும். கைகளை உபயோகப்படுத்தி செய்யப்படும் HANDS ON PHYSIOTHERAPY மற்றும் MANUAL THERAPY எடுத்துக் கொள்ளும் போது கீழ் முதுகு வலியை முற்றிலும் குணப்படுத்த முடியும். பின்பு நாமாகவே கீழ் முதுகு வலி வராமல் தடுக்கும் நடைமுறைகளையும் உடற்பயிற்சிகளையும் தொடர்ந்து செய்யலாம்.
நம் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள தசைகள் (CORE MUSCLES) வழுவிழந்து இருப்பதால் தான், நம் உடல் சமநிலையை இழக்கிறது. நாளடைவில் ஒரு பக்கமாக சாய்ந்து, இரு கால்களிலும் எடையை மாற்றி மாற்றி நிற்க தொடங்குகிறோம். அதனால் முதுகு தண்டுவடத்தை நிமிர்த்தி நேராக அமர்வதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும்.
கை மற்றும் கால்களை நீண்ட நேரம் அசையாமல் வைத்து வேலை செய்யும் போது முதுகு தண்டுவட தசைகள் இறுக்கமாகிறது. இதனால் கூட கீழ் முதுகு வலி ஏற்படுகிறது. டிரைவர் மற்றும் கம்யூட்டரில் அமர்ந்து வேலை செய்பவர்கள் இதனை உணர முடியும். வேலையின் போது அவ்வப்போது 20 நிமிடத்திற்கு ஒரு முறை எழுந்து நடைபயிற்சி செய்ய வேண்டும்.
தினமும் 30 நிமிடம் ஏதாவது உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். கீழ் முதுகு வலி ஏற்படும் போது சூடாக வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம், வலியை குறைக்க உதவும். வேலை செய்யும் இடத்தில் சேர், கம்ப்யூட்டர் டேபிள் உயரம், தகுந்தவாறு மாற்றியமைக்கலாம்.
கீழ் முதுகு வலிக்கென்றே பிரத்தேயக பயிற்சிகளை உடற்பயிற்சி நிபுணர் மற்றும் பிஸியோதெரபிஸ்ட்டின் ஆலோசனையுடன் மேற்கொள்ளலாம்.
ஏ.டி.சி.முருகேசன், ஸ்ரீ ஓம் பிசியோதெரபி சென்டர்,
என்.ஜி.ஓ.காலனி, விருதுநகர் – 626 001.
தொலைபேசி : 91 99942 79960