பக்திமான் டி.ராஜேந்தருக்கு மருமகளாகப்போகும் முஸ்லீம் இளம் பெண்!

சிம்புவின் சகோதரர் குறளரசன் இஸ்லாமியப் பெண்ணை நிக்கா செய்ய உள்ளார்.


நடிப்பு, இசை, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என திரையுலகின் அத்தனை துறைகளிலும் முத்திரை பதித்தவர் டி ராஜேந்தர். இவரது மூத்த மகன் சிம்புவும் தந்தையைப் போலவே இயக்கம் நடிப்பு என தனது திறமையை திரை உலகுக்கு நிரூபித்துக் காட்டினார். ராஜேந்திரன் இளைய மகனான குறளரசன் இசை அமைப்பாளராக உள்ளார். சிம்பு நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு என்ற திரைப்படத்திற்கு குறளரசன் தான் இசையமைத்து இருந்தார். தற்போது அவர் இஸ்லாமிய பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

நபீலா அஹமது என்ற அந்தப் பெண்ணுக்கும் குறளரசனுக்கும் வருகிற 26-ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற உள்ளது. 29 ஆம் தேதி மாலை 7 மணி அளவில் கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலில் வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பிதழை கொடுக்கும் பணியில் டி ராஜேந்தர் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

அண்மையில் அவர் தேமுதிக நிறுவனர் விஜயகாந்தை சந்தித்து தனது மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார். நடிகர் விஜயகாந்தும் டி ராஜேந்தர் உடனான நட்பு குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். குறளரசன் கடந்த பிப்ரவரி மாதத்தில் இஸ்லாம் மதத்தைத் தழுவினார். இதற்கான காரணம் தனது காதலிக்காக தான் இருக்குமோ என்று சமூகவலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.