மகளின் சடலத்துடன் பல நாட்கள் படுத்திருந்த இளம் தாய்! நேரில் பார்த்து அதிர்ந்து போன தந்தை! அதிர வைக்கும் சம்பவம்!

சிட்னி: இறந்து போன மகளின் சடலத்தை விட்டு பிரியாமல் பல நாளாக சோகத்தில் வாடிய தாயை போலீசார் மீட்டுள்ளனர்.


ஆஸ்திரேலியாவை சேர்ந்த எட்வர்ட் - நிகோலஸ் தம்பதியினருக்கு, 11 வயதில் சோபி என்ற மகள் உள்ளார். இதில் எட்வர்ட் தனது குடும்பத்தினரை பிரிந்து வெளியூரில் தங்கி பணிபுரிந்து வருகிறார். அதேபோல, சோபி பள்ளிக்குச் சென்று வர அவரை நிகோலஸ் பராமரித்து வந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சோபி பள்ளிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

பள்ளி நிர்வாகத்தினர் சோபியை தொடர்பு கொள்வதற்காக, தொலைபேசியில் பலமுறை அழைத்தாலும் பதில் வரவில்லை. இதற்கிடையே, எட்வர்டும் தனது மனைவி, மகளுடன் பேசுவதற்காக, பலமுறை தொலைபேசியில் அழைத்துள்ளார். ஆனால், எந்த பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த எட்வர்ட், அண்டை வீட்டில் வசிப்பவரிடம் இந்த விசயத்தைக் கூறி, தனது வீட்டை நேரில் சென்று பார்வையிடும்படி கேட்டுள்ளார். 

இதன்பேரில், அண்டை வீட்டுக்காரர் எட்வர்டின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, மர்மமான முறையில் சோபி இறந்து கிடந்துள்ளார். அவரது சடலத்தின் அருகே நிகோலஸ் கடுமையான ரத்த காயங்களுடன்  படுத்து கிடந்திருக்கிறார். சோபி இறந்து பல நாட்கள் ஆகியிருக்கலாம் எனவும், கடும் துர்நாற்றம் வீசுவதாகவும்  அண்டை வீட்டுக்காரர் போலீசில் புகார் அளித்தார். உடனடியாக வந்த போலீசார், சோபியின் சடலத்தை மீட்டனர். நிகோலஸை மருத்துவமனையில் சேர்த்தனர். 

சிறுமி சோபியை நிகோலஸ் அடித்துக் கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணையை தொடங்கியுள்ளதாக, போலீசார் தெரிவிக்கின்றனர். அதேசமயம், மகள் இறந்தது தெரிந்தும் அவரது சடலத்தின் அருகிலேயே பல நாளாக நிகோலஸ் படுத்து கிடந்தது பற்றியும் விசாரிக்கின்றனர்.