டீசர்ட்டுடன் ஆற்றில் குதித்த சித்தார்த்தா! வெறும் உடலுடன் கரை ஒதுங்கியது எப்படி? பீதி கிளப்பும் விசாரணை!

தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் கஃபே காஃபி டே உரிமையாளர் சித்தார்தாவின் டீ சர்ட்டை மையமாக வைத்து சர்ச்சை வெடித்துள்ளது.


இந்திய பெரும் தொழில் அதிபர்களில் ஒருவதாக திகழ்ந்தவர் காபி டே உரிமையாளர் சித்தார்தா. சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் அதிகமானதை தொடர்ந்து தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு கடந்த திங்களன்று மாயமானார் சித்தார்தா.

புதனன்று கர்நாடகாவின் நேத்ராவதி ஆற்றின் கரையில் சித்தார்தாவின் உடல் கரை ஒதுங்கியது. அப்போது மேலே உடை எதுவும் இல்லாமல் வெறும் உடலுடன் சித்தார்தா உடல் இருந்தது.

ஆனால் தற்கொலை செய்வதற்கு முன்னதாக சித்தார்தா இளம் நீல நிற டீ சர்ட் அணிந்திருந்ததாக அவரது ஓட்டுனர் கூறியிருந்தார். இதனை அடுத்து அவர் உடல் மீட்கப்பட்ட இடத்தில் தேடுதல் வேட்டை நடைபெற்றது.

ஆனால் இறுதி வரை அந்த டீசர்ட் கிடைக்கவே இல்லை. தற்கொலை செய்து கொள்ளப்போகும் நபர் டீசர்ட்டை கழட்டி வைத்துவிட்டா தற்கொலை செய்து கொள்வார் என்று கேள்வி எழுந்தது. அதே சமயம் சித்தார்தாவின் ஜீன்ஸ் அப்படியே இருந்தது. இதே போல் அவரது ஷீக்களும் கூட கால்களில் இருந்தது.

அப்படி இருக்கையில் டீ சர்ட்டை மட்டும் கழட்டி வைத்துவிட்டா சித்தார்தா ஆற்றில் குதிப்பார் என்று கேள்வி எழுந்தது. மேலும் அவர் குதித்ததாக சொல்லப்பட்ட இடத்திலும் டீசர்ட் கிடைக்கவில்லை. இதனால் இந்த டீ சர்ட்டை வைத்து சித்தார்தா மரணம் தொடர்பான சர்ச்சை வெடித்துள்ளது.