அழகாய் தெரிவதற்காக கிரீம்களை பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கான எச்சரிக்கை!

அழகு கிரீம்களுக்கு இந்தியா-பெரிய சந்தையாக உள்ளது.


சிவப்பழகு கிரீம்கள் மூலம் தோலுக்கு நிறம் அளிக்கும் நிறமியான மெலனின் அளவை படிப்படியாக குறைக்க முடியும் எனக் கூறி பேர்னஸ் கிரீம் விளம்பரங்கள் தொலைக்காட்சியில் வருவதைக் காண முடியும். இது சரியானதா, இது அறிவியல் பூர்வமாக நிரூபணமாகியுள்ளதா, பக்கவிளைவுகள் என்னென்ன என விரிவாகப் பார்ப்போம்.

தோலில் மெலனின் உற்பத்தியைத் தடுக்கும் வைட்டமின் சி வகையைச் சேர்ந்த குணம் கொண்டது. ரெட்டினோயிக் அமிலம் வைட்டமின் ஏ வகையை சார்ந்த தோலின் மேற்பரப்பு படலங்களை அகற்ற உதவும். இதன்மூலம் தோலின் அடர்நிற செல்கள் நீக்கப்படும்.

இதில் சேர்க்கப்படும் ஹைட்ரொகுவினோன் ரசாயனம் தோலை வெண்மையாக்க பயன்படுத்தப்படுகிறது. இது தோலுக்கு அதிக எரிச்சலை ஏற்படுத்தும். கோஜிக் அமிலம், ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாக சேர்க்கப்படுகிறது.

மெலனின் அளவை படிப்படியாகக் குறைப்பது ஆரோக்கியமானதல்ல என பல சரும நோய் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் சருமத்தின் சூரிய ஒளியின் வெப்பத்தைத் தாங்கக்கூடிய திறன் குறைவதோடு, சூரியனின் ஆபத்தான யூவி கதிகள் சரும பாதிப்பை உண்டாக்கும் என்கிறார்கள்.

மெலனின் உற்பத்தியைத் தடுக்கவும் தோலை வெண்மை ஆக்கவும் மெலனின் ரிடக்‌ஷன் ஊசிகள் பயன்படுத்தப்படுகின்றன. பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்ஸன் விட்லிகோ என்னும் தோல் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவரது உடலில் ஆங்காங்கே வெள்ளை திட்டுகள் உருவாகத் தொடங்கின.

இது உடல் முழுவது பரவியது. இதனைத் தடுக்க அவர் அதிக பக்க விளைவுகள் கொண்ட மெலனின் ஊசியை போட்டுக்கொண்டார். இதனால் அவரது சருமம் வெண்மையாகியது.

ஆக, மெலனினை குறைக்க இவ்வளவு மெனக்கெடுவதற்கு பதிலாக சத்தான காய்கறி, பழங்களை பெண்கள் தினமும் சாப்பிட்டு வந்தாலே சருமம் பொலிவாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.