சித்தார்த்தின் சித்து வேலை..? 15 வயது சிறுமியுடன் நெருக்கம்..! வெளியான புகைப்படத்தின் உண்மை பின்னணி!

சென்னை: தன்மீது பாலியல் குற்றம் சுமத்திய நபருக்கு, நடிகர் சித்தார்த் பதிலடி கொடுத்துள்ளார்.


சினிமா நடிகர் சித்தார்த், சமீப நாட்களாக, ட்விட்டரில் தமிழக அரசியல் நிலவரம் மட்டுமின்றி பாஜகவை குறிவைத்து விமர்சிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவரது கருத்து பல தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்திய சூழலில், சமீபத்தில், என்ஆர்சி மற்றும் சிஏஏ எனப்படும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் சித்தார்த் நேரடியாக பங்கேற்றார். இதையடுத்து, அவர் மீது தவறான தகவல் பரப்பும் நோக்கில் ட்விட்டரில் சிலர் கமெண்ட் பகிர தொடங்கியுள்ளனர்.  

சித்தார்த், ஆண், பெண்களுடன் எடுத்துக் கொண்ட குரூப் புகைப்படம் ஒன்றை பகிர்ந்த ட்விட்டர் பயனாளர் ஒருவர், அதில் சித்தார்த் குறிப்பாக, ஒரு வெள்ளைக்கார பெண்ணின் மீது கைபோட்டு நிற்பதை சுட்டிக்காட்டி, ''பொண்ணுங்களுக்கு 14,15 வயசு தா இருக்கும் போல. அந்த வெளிநாட்டு பொண்ண எப்பிடி கட்டி புடிச்சு நிக்கிறான் பாருங்க. வலது பக்கம், ஓரத்துல இருக்குற பொண்ணு பேண்ட் கூட போடல. என்னடா பண்றீங்க.??'' என்று கேள்வி கேட்டிருந்தார்.  

இந்த பதிவை Mothilal Parthasarathy என்ற ட்விட்டர் ஐடியில் இருந்து வெளியிடப்பட்டது. இதற்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை டேக் செய்து, பதில் அளித்துள்ள சித்தார்த், ''இது திட்டமிட்டு செய்யும் மோசடி குற்றச்சாட்டு. பாஜக ஐடி பிரிவு இந்த வேலையை செய்கிறது. அவர்களின் உண்மை சாயம் வெளுத்துவிட்டது.

நாம் என்ன சாப்பிட வேண்டும், என்ன குடிக்க வேண்டும், யாருடன் பழக வேண்டும் என்பது பற்றி அவர்கள் ரொம்ப கவலைப்படுகிறார்கள். நமக்கு கெட்ட பெயர் சுமத்தி, முத்திரை குத்த அவர்கள் முயற்சிக்கிறார்கள். கோழைகள். என்னைப் பற்றி வாட்ஸ்ஆப் உள்பட சமூக ஊடகங்களில் விஷமத்தனமான வதந்தியை பரப்பும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

நான் சமீபத்தில் போராட்டத்தில் பங்கேற்றேன் என்பதற்காக, இப்படி திட்டமிட்டே எனது நண்பர்களையும், குடும்பத்தினரையும் இழிவுபடுத்தும் வகையில் தவறான தகவலை பாஜக ஐடி பிரிவு பரப்பி வருகிறது. ஏன் உங்களுக்கு என்னைப் பார்த்தால் இவ்ளோ பயம்?'' எனக் குறிப்பிட்டுள்ளார்.