சுத்தியலால் அடித்தும் உடையாத பச்சை முட்டை! சியாச்சின் ராணுவ வீரர்களின் பரிதாப நிலை! வைரல் வீடியோ!

இந்திய பாக்கிஸ்தான் எல்லையில் மக்களுக்காக போராடும் இராணுவ வீரர்கள், அனுதினம் உணவுப்பொருட்கள் பனியில் உறைந்துபோவதால் அவதிக்குள்ளாவது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.


இமாலயத்தை அடுத்து சியாசென் பகுதியை சேர்ந்த கேம்பில் தற்போது கிட்டத்தட்ட 70 க்கும் குறைவான வெப்பனிலை நிலவி வருகிறது. பனி பெய்து உறைந்து கிடக்கும் அந்த சுற்றுப்பகுதியில்  இராணுவ வீரர்கள் மூன்று பேர், அதீத பனியினால் உறைந்து போன முட்டை, தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட உணவுப்பொருட்களை சுத்தியல் கொண்டு உடைப்பது போன்ற காட்சிகள் வைரலாகி வருகிறது.

சுற்றிலும் பனி சூழ்ந்த இடத்தின் மையத்தில் நிற்க்கும் மூன்று வீரர்கள், உறைந்து போன தக்காளி, முட்டை, உருளை கிழங்கு உள்ளிட்ட பொருட்களை உபயோகிக்க முடியாமல் சுத்தியல் கொண்டு கல்லை போல நொறுக்குகின்றனர்.

மனித இயல்பை தாண்டி அதீத குளிரை தாங்கிக்கொண்டும் எல்லையில் நிற்க்கும் தியாக உணர்வு, அடிப்படை தேவையான உணவுப்பொருட்கள் இல்லாத போதும், முகத்தில் சிரிப்புடன் காணப்படுவது அவர்களுக்கே உரித்தான மன திண்மையை காண்பிக்கிறது எனலாம் .