என் ஓட்டு அவங்களுக்கு தான்! கமலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ருதி ஹாசன்!

''என் ஓட்டு உங்களுக்கே அப்பா,'' என்று, நடிகை ஸ்ருதி ஹாசன், தனது தந்தைக்கு ட்வீட் செய்துள்ளார்.


மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கிய கமல்ஹாசன், தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி, போட்டியிடுவதாக, அறிவித்துள்ளார். இந்நிலையில், தற்போது அவர் புதிய பிரசார வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், முந்தைய ஆட்சியாளர்கள் மீது கடும் கோபம் கொண்ட கமல்ஹாசன், டிவியை அடித்து நொறுக்குவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

இது பல தரப்பிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே வீடியோவை கமல்ஹாசன், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  இதற்குப் பதில் அளித்து, ரீட்வீட் செய்துள்ள அவரது மகள், ஸ்ருதி ஹாசன், ''உங்களை நினைத்து பெருமையாக உள்ளது அப்பா, என் ஓட்டு எப்போதும் உங்களுக்கே, தொடர்ந்து செயல்படுங்கள்,'' என்று பதிவிட்டுள்ளார்.