இரவில் என்னை கடித்து குதறி பலாத்காரம் செய்தான்! காதலன் குறித்து இளம் பெண் பகீர் புகார்!

மும்பை: ''எனது #MeToo அனுபவம், மற்றவர்களுக்கு நல்ல முன்னுதாரண பாடமாக இருந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்று, ஸ்ருதி சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.


கடந்த ஆண்டில் இந்தியா முழுக்க #MeToo என்ற பெயரில், பாலியல் குற்றச்சாட்டுகள் வெடித்தன. பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை, #MeToo என்ற ஹேஷ்டேக்கில் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இதன்போது, மும்பையை சேர்ந்த ஸ்ருதி சவுத்ரி என்ற பெண், ஃபேஸ்புக்கில் மும்பையின் மனிதர்கள் என்ற தலைப்பில் வெளியிட்ட ஒரு தகவல் பெரும் வைரலாகப் பரவியது.

இந்நிலையில், இந்த பதிவு பற்றி தற்போது அவர் மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். இதன்படி அவர் கூறுகையில், ''நானும், எனது ஆண் நண்பரும் ஸ்காட்லாந்துக்கு ஒன்றாகச் சென்றிருந்தோம். அப்போது, ஒரே அறையில் தங்கிக் கொள்ளலாம் என, ஆண் நண்பர் சொல்ல, நான் முதலில் மறுத்தேன். பின்னர், அதனால் ஒன்றும் தவறில்லை எனக் கூறி, நான் ஒத்துக் கொண்டேன்.

இரவு நேரத்தில், அவன் திடீரென என் மேல் பாய்ந்து, என்னை பலாத்காரம் செய்ய முயன்றான். நான் தடுக்கவே, என்னைப் பிடித்து கடித்து, கைகளால் கீறி காயப்படுத்தினான். அவனது காட்டுமிராண்டித்தனம் எனக்கு பயங்கர வலியை ஏற்படுத்தியது. பின்னர் அவனிடம் இருந்து தப்பினாலும், வேறு வழியின்றி அவன்கூடவே வேலை செய்ய நேரிட்டது.

என்னைப் போலவே, பல இளம்பெண்களை வெளிநாட்டிற்கு புராஜெக்ட் எனக் கூறி அழைத்துச் சென்று அவன் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளான். இதன்போதுதான், #MeToo என்ற ஹேஷ்டேக் பிரபலமானது. இதனை பயன்படுத்தி, எனக்கு நேர்ந்த பாலியல் தொல்லையை வெளியிட்டேன். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது,'' என்று ஸ்ருதி சவுத்ரி கூறியுள்ளார்.