டீ சர்ட் விலை ரூ.20! முண்டியடித்த இளைஞர்கள்! ஸ்தம்பித்து சேலம்!

கோடை என்றாலே ஷாப்பிங் விளம்பரங்கள் தான் திரும்பிய திசையெங்கும் கண்ணில்படும் என்றாலும் ஒரு கடையின் தள்ளுபடி விளம்பரத்தால், வாடிக்கையாளர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி போட்டிருந்த துணியே கிழிந்தும் ஆர்வத்துடன் ஷாப்பிங் செய்துவருவது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது..


சேலம் - ஓமலூர் சாலையில் புதிதாக துவங்கபட்ட துணிக்கடையில் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் டி சர்ட் -20 ரூ, பாண்ட் -125 ரூ க்கும் விற்பனை செய்யவுள்ளதாக விளம்பரம் செய்யபட்டதை அடுத்து வாடிக்கையாளர் கூட்டம் அதிகரிக்க துவங்கியது.

இதனை அறிந்து மேலும் 2 கடைகளும் மலிவான விலைக்கு துணிகளை விற்க முன்வந்த நிலையில் உற்சாகமடைந்த வாடிக்கையாளர்கள் கூட்டத்தித்தினால் அப்பகுதியே பலத்த போக்கு வரத்து நெரிசல் நிலவியது.

கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் தான் போட்டிருந்த துணியே கிழிந்த நிலையிலும் ஆர்வத்துடன் ஷாப்பிங் செய்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது...