பொள்ளாச்சி ஆபாச வீடியோ கும்பலுக்கு உதவிய இளம்பெண்! அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்!

பொள்ளாச்சி ஆபாச வீடியோ கும்பல் குறித்து அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 நான்கு பேரும் சிறையில் உள்ள நிலையில் அவர்களுக்கு உதவியவர்கள் குறித்த தகவல்களை சிபிசிஐடி போலீசார் திரட்டி வருகின்றனர்.

அந்த வகையில் பொள்ளாச்சி கும்பல் பெண்களை வசியம் செய்ய இளம்பெண் ஒருவரை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அந்த இளம் பெண் தான் வேறு சில பெண்களின் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை பொள்ளாச்சி கும்பலுக்கு கொடுத்துள்ளது.

அந்தப் பெண்ணின் உதவியுடன் வேறு பெண்களுக்கு வலைவிரிக்கும் திருநாவுக்கரசு தலைமையிலான கும்பல் காதல் வலை விரித்து அவர்களை தங்களுடைய வலையில் வீழ்த்தி பின்னர் ஆபாச படம் எடுத்து மிரட்டி வந்துள்ளனர்.

இதற்கு பிரதிபலனாக அந்தப் பெண்ணுக்கு ஆபாச வீடியோ கும்பல் பணம் மற்றும் தேவையான வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. பொள்ளாச்சி கும்பலுக்கு உதவிய அந்த இளம்பெண்ணை சிபிசிஐடி போலீசார் யார் என அடையாளம் கண்டுள்ளனர். 

திருநாவுக்கரசு சதீஷ் சபரி ராஜன் உள்ளிட்டோர் சிக்கிய உடனேயே அந்த இளம்பெண் தலைமறைவாகியுள்ளார். தற்போது அந்த இளம்பெண் எங்கு இருக்கிறார் என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விரைவில் கைது செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது