போய் வருகிறேன் அம்மா! 300 அடி ஆழம்! பனிமூட்டம்! சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்! அதிர்ச்சி காரணம்!

இளம்பெண் ஒருவர் மலைப்பகுதிகளில் சடலமாக கிடந்த சம்பவமானது மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஹைதராபாத் மாநிலத்தை சேர்ந்தவர் அலிஜா ராணா. இவருடைய வயது 24. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிரபல தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் சென்ற வியாழக்கிழமை அன்று தன்னுடைய வாட்ஸ்அப்பில் "போய் வருகிறேன்" என்று ஸ்டேட்டஸ் வைத்திருந்தார்.

இதனைப் பார்த்த அலிஜாவின் பெற்றோர் கடுமையாக பயந்தனர். உடனடியாக அவருக்கு கால் செய்து பார்த்தனர். ஆனால் அவர் காலை எடுக்கவில்லை. இதனால் பயந்து போன பெற்றோர் சிலரின் உதவியுடன் உள்ளூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் பெண்ணின் மொபைல் சிக்னல் வைத்துக்கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அலிஜாவின் பணப்பை மற்றும் மொபைல் போன் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லோனாவாலா பகுதியில் கிடைத்துள்ளது. உடனடியாக காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று மிஷ்ரா என்ற மலையேறும் குழுவின் தலைவருடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மொத்தமாக 32 இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தொடர் மழை மற்றும் மிகுந்த பனி மூட்டத்தின் ஆல் தேடுதல் குழுவினர் மிகுந்த சிரமம் அடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தங்களை குழுக்களாக பிரித்துகொண்டு வாக்கி டாக்கி மூலம் தொடர்பில் இருந்துள்ளனர். 

ராகுல் என்ற குழு உறுப்பினர் அலிஜாவின் உடலை கண்டுபிடித்ததாக அன்று மதியம் பிறருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அனைவரும் அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது 300 அடி ஆழத்தில் அலிஜாவின் சடலத்தை கண்டுள்ளனர். 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவருடைய சடலத்தை வெளியே எடுத்து உள்ளனர்.

கைப்பற்றப்பட்ட உடலை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.