போக்கிரிகள் பட்டியலில் 2வது பெயர்! PCR கிரிமினல் கேஸ்! நாங்குநேரி அதிமுக வேட்பாளரின் பகீர் பயோடேட்டா!

பத்தாவது படித்திருக்கும் நாராயணன், ரெட்டியார்பட்டி நாராயணன் என்று அறியப்படுகிறார்.திருநெல்வேலி மாவட்ட எம்ஜிஆர் மன்ற புறநகர் இணைச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கின்றார்.


தொழில் ரியல் எஸ்டேட்.அதில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்,ஒபிஎஸ் சம்பந்தியும் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியுமான கந்தசாமியின் மகன் ஆகியோர் நாராயணனின் பார்ட்னர்கள்.ஒபிஎஸ் சிபாரிசில் தான் இவருக்கு சீட்டுக் கொடுக்கபட்டு இருக்கிறது.

இவர் மீது பி.சி.ஆர் கிரிமினல் கேஸ் உட்பட பல வழக்குகள் உள்ளன என்கிறார்கள் உள்ளூர் ரத்தத்தின் ரத்தங்கள்.ஒரு காலத்தில் பெருமாள்பட்டி காவல் நிலையத்தில் போக்கிரிகள் பட்டியலில் ( இரண்டாம்நிலை) இவர் பெயர் இடம்பெற்று இருந்ததாம்.

இப்போது நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகம் இயங்கும் கட்டிடம் இவருக்குச் சொந்தமானதாம்.அந்த இடத்தை யாதவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை ஏமாற்றி கைப்பற்றியது உட்பட இவர்மீது ஏகப்பட்ட நிலமோசடி வழக்குகள் இருக்கின்றனவாம்.ஆனால் ஒபிஎஸ் வாரிசுகளின் பிஸ்னஸ் பார்ட்டர் என்பதால் இந்த வழக்குகள் எதுவும் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லையாம்.

ஆனால் உள்ளூர் திமுக மற்றும் காங்கிரசார் இந்த வழக்குகளின் எஃப்.ஐ.ஆர் காப்பிகளோடு பிரச்சாரத்தில் இறங்கப் போகிறார்களாம்.இவருக்காக தேர்தல் பணியாற்றும் குழுவின் தலைவராக இருக்கும்,அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமிக்கு இது பெரிய தலைவலியாக மாறும் என்று தெரிகிறது.

இப்போதெல்லாம் எம்.பி.எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை உடனுக்குடன் விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும் நேரத்தில் இவர்தான் வேட்பாளராக கிடைத்தாரா என்கிறார்கள் அதிமுக தொண்டர்கள்.