நடிகரின் காதலியை அபகரித்த பிரபல அரசியல் தலைவரின் மகன்! அதிர்ச்சியில் திரையுலகம்!

சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகனான ஆதித்யா தாக்கரே, பிரபல நடிகையுடன் உணவு விருந்தில் கலந்து கொண்டார்.


எம்.எஸ். தோனி அண்டோல்ட் ஸ்டோரி என்ற திரைப்படத்தில் நடித்தவர் திஷா பட்டானி. இவர் அடுத்ததாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிக்கும் பரத் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் கத்ரினா கைப் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இவர் தற்போது அரசியல் பிரபலம் ஒருவரின் மகனுடன் மதிய உணவு விருந்துக்கு சென்று சமூக வலைதளங்களுக்கு தீனி போட்டுள்ளார். அந்த அரசியல் பிரபலத்தின் மகன் வேறு யாரும் அல்ல, மகாராஷ்டிராவின் முக்கிய கட்சியாக இருக்கும் சிவ சேனா அமைப்பின் தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே தான்.

மும்பை மாநகரில் உள்ள பந்த்ரா என்ற இடத்தில் இருக்கும் பிரபல உணவகத்தில் தான் இருவரும் ஜோடியாக உணவு அருந்தியுள்ளனர். இவர்கள் இருவரும் ஒன்றாக காரில் சென்றது முதல் உணவு உண்டது வரை அனைத்து புகைப்படங்களையும் நெட்டிசன்கள் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

இருவருக்கும் இடையிலான உறவு என்ன என்பது குறித்து மிகப் பெரிய விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அண்மையில் கரண் ஜோஹரின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆதித்யா தாக்கரே விடம் நடிகை உடனான தொடர்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஆதித்யா, தாங்கள் இருவரும் சிறந்த நண்பர்கள் என தெரிவித்தார். மேலும் திஷாவுடன் நேரத்தை செலவிடுவது மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

முன்னதாக பிரபல நடிகர் ஜாக்கி ஷெராபின் மகன் டைகர் ஷெராப்புடன் சேர்த்து திஷா படானி கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் நெருக்கமாக இரக்கும் புகைப்படங்களும் வெளியாகின. இந்த நிலையில் ஆதித்யா தாக்ரே நடிகையை நடிகரிடம் இருந்து கவர்ந்துவிட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.