ஐஸ் க்ரீம் கேட்ட காதலி: கேலி செய்த காதலனுக்கு கத்திக்குத்து

சிங்கப்பூர்: ஐஸ் க்ரீம் கேட்ட காதலியை கிண்டல் செய்த காதலன் கத்தியால் குத்தப்பட்டார்.


சிங்கப்பூரில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆகஸ்ட் 14ம் தேதியன்று, சீனாவில் இருந்து வந்த தனது காதலியை அந்த காதலன் சந்தித்துள்ளார். இருவரும் கடந்த ஒரு மாதமாக டேட்டிங் செய்து வந்த நிலையில், அடிக்கடி ஐஸ் க்ரீம் வாங்கி தரும்படி காதலனை, அந்த காதலி கேட்டிருக்கிறார்.

ஆனால், குண்டாக இருப்பதாகக் கூறி, காதலன் கேலி செய்து வந்திருக்கிறார்.இதில் ஆத்திரமடைந்த காதலி, கத்தரிக்கோலை ஒளித்து வைத்திருந்து,  ஆகஸ்ட் 14ம் தேதி, சிங்கப்பூரின் ஷாப்பிங் தெருவில் வைத்து, காதலனை குத்தினார்.

இதில் காதலனுக்கு நிறைய ரத்த இழப்பு ஏற்பட்டு, உயிரிழந்தார். சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய காதலியை, நீண்ட தேடுதலுக்குப் பின்னர் போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.இச்சம்பவம் சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.