நடிகைகளில் விசித்திரமானவர் நயன்தாரா. ஆம், அஜித் மாதிரி தனித்தன்மை கொண்டவர். படம் சம்பந்தப்பட்ட எந்த புரமோஷன் விஷயங்களிலும் கலந்துகொள்ள மாட்டார். இதையெல்லாம் அவர் திமிராகத்தான் செய்கிறார் என்று சொல்கிறார் பத்திரிகையாளர் மீரான். இதோ அவரது பதிவு.
நயன்தாராவுக்கு நச்சுன்னு ஒரு கேள்வி. என்னமா இப்படி பண்றீங்களேம்மா
தமிழ் நாட்டில் லேடி சூப்பர் ஸ்டராக கொண்டாடப்படுகிறவர் நயன்தாரா. அவருக்கும் எனக்கும் எந்த வாய்க்கா, வரப்பு தகராறும் கிடையாது. ஆனால் திமிர், பந்தா தரப்பு தகராறு உண்டு. அவருடைய காதல், காதல் தாவல்கள், மதமாற்றம், வெளிவந்த சில அந்தரங்க, புகைப்படங்கள், வீடியோக்கள் இன்ன பிற விஷயங்கள் பற்றி எனக்கு கவலை இல்லை. அது அவர் தனிப்பட்ட விவகாரம். அதற்குள் நான் போக விரும்பவில்லை.
அவர் எந்த திரைப்பட விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை, பொது விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை. அது அவரது தனிப்பட்ட பாலிசி என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவர் படத்தை காசு கொடுத்து பார்க்கிற ஒவ்வொரு ரசிகனுக்கும், அவர் பெயரும், முகமும் திரையில் வருகிறபோது கைதட்டுகிற ரசிகனுக்கு அவர் பதில் சொல்ல கடமைப்பட்டவர். காரணம் அவர்களின் வியர்வை துளிகள்தான் நயன்தாரா குளிக்கிற நீச்சல்குளத்து நீர்.
ரசிகர்களின் சார்பில் ஒரு பத்திரிகையாளனாக அவரிடம் சில கேள்வி கேட்க எனக்கு உரிமை உண்டு. உங்களை வாழ வைக்கும் 24 தொழிலாளர் சங்கம் சினிமாவில் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அதன் பெயர், தொழிலாளர்களின் வாழ்வியல் உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் வீட்டுக்கு போயிருக்கிறீர்களா? அவர்கள் பிரச்சினை தெரியுமா?
உங்களை வைத்து படம் எடுத்த பல தயாரிப்பாளர்கள் வீடு, வாசலை விற்று கடனில் தவிப்பது தெரியுமா? ஆனால் வருமானவரித்துறை அதிகாரிகள் சங்கம் நடத்தும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறீர்களே அது எப்படி?
கடைசி கேள்விக்கு மட்டும் எங்களுக்கு பதில் தெரியும். ‘நயன்தாரா குடுமி சும்மா ஆடுமா?’ என்று கேட்டுள்ளார். வருமான வரித்துறைக்கு ஏன் பயப்படுகிறார் நயன்தாரா என்பதுதான் கேள்வி. பதில் சொல்லுங்க மேடம்.