தள்ளாத வயதிலும் ஜனநாயகம் காத்த சங்கரய்யா!சபாஷ் அன்பழகன்!

ஒரே ஒரு ஓட்டு போடுவதால் என்ன ஆகப்போகிறது, போடாமல் விடுவதால் என்ன நிகழப் போகிறது என்ற அலட்சிய மனப்பான்மை இன்றைய இளைஞர்களிடம் அதிகம் காணப்படுகிறது. அதாவது இவர்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லையாம்.


அதேபோன்று இன்னொரு மனப்பான்மையும் இப்போது அதிகரித்து வருகிறது. அதாவது நோட்டாவுக்கு ஓட்டுப் போடுவார்களாம். இன்று தேர்தல் களத்தில் நிற்கும் நபர்களில் யாருமே அவர்களுக்குப் பிடிக்கவில்லையாம்.

அவர்கள் தொகுதியில் எத்தனை வேட்பாளர்கள் நிற்கிறார்கள், அவர்கள் யார், என்னென்ன கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றுகூட யோசிக்காமல், ஆய்வு செய்யாமல் நோட்டாவுக்கு ஓட்டு போட்டு வாக்கை வீணடிக்கிறார்கள்.

இந்த நிலையில் நம்பிக்கை தரும் மூத்த அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். தள்ளாத வயதில் விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவருமான தோழர் சங்கரய்யா, அவரது 98 வயதில் வாக்கை பதிவு செய்திருக்கிறார்.

அதேபோன்று பேராசிரியர் அன்பழகன் தன்னுடைய தள்ளாத வயதில் மூக்கில் மூச்சுக் குழாய் மாட்டியபடி வீல் சேரில் வந்து வாக்கை பதிவு செய்திருக்கிறார். இவர்கள் ஒற்றை வாக்குதானே என்று விட்டுப் போகவில்லை. 

இவர்கள் இளைஞர்களுக்கு ஒரு பாடம் மட்டுமல்ல படிப்பினை, வாக்கினை வீணடிக்காதீர்கள்.