இர்பான் பதான், ஜாகீர் கான் சாதனையை தகர்த்த ஷமி!

இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் ஷமி குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை செய்துள்ளார். இதன் மூலம் இவர் இர்பான் பதான் மற்றும் ஜாகீர் கான் ஆகியோர்களின் சாதனைகளை முறியடித்து இந்திய பந்து வீச்சாளர்களில் முதல் இடத்தில உள்ளார்.


இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியில் ஷமி நியூஸிலாந்தின் தொடக்க வீரர்கள் இருவரின் விக்கெட்களையும் வீழ்த்தினார். இதில் மார்ட்டின் குப்தில் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமாக இவர் 56  போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்தி இந்திய பந்து வீச்சாளர்களில் முதல் இடத்தில் உள்ளார்.

இவருக்கு அடுத்த படியாக இர்பான் பதான் 59 போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஜாகீர் கான்65 போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். சர்வதேச அளவில் வேகமாக 100 விக்கெட்களை வீழ்த்தியவர் பட்டியலில்  ஷமி 6 வது இடத்தில உள்ளார்.

இந்தியா நியூஸிலாந்திற்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் ஷமி 3 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இந்திய அணி நியூஸிலாந்து அணியை  8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தெடுத்து அவுட் ஆகி வெளியேறினர். நியூஸிலாந்து அணி அணைத்து விக்கெட்களையும் இழந்து 157ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதுஅந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மட்டும் அதிகபட்சமாக 64 ரன்களை எடுத்தார்.

 

இந்திய அணியின் குல்தீப் யாதவ் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார். ஷமி 3 விக்கெட்களையும், சஹால் 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்கள்

 

பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். கோஹ்லி 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

 

சிறப்பாக விளையாடிய தவான் ஆட்டமிழக்காமல் 75 ரன்களை எடுத்தார். 34.5 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்தது. இதனால் இந்தியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது