உணவு சாப்பிடும்போது தண்ணீர் பருகலாமா?

சாப்பிடும்போது அவ்வப்போது தண்ணீர் குடிப்பது பலருடைய பழக்கம். இதனால் குறைவான உணவு உள்ளே போகும் என்று நம்புகிறார்கள். ஆனால் இந்த பழக்கம் உங்கள் உடல்நலத்திற்கு பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?


வயிற்றில் உள்ள செரிமான அமிலங்கள்தான்,  செரிமானத்திற்கும் உணவை உடைக்கவும் பயன்படுகிறது. இந்த செரிமான என்சைம்கள், நீங்கள் உண்ணும் உணவை  இறுக்கி, அரைக்க உதவும். ஆனால், இந்த அமிலம் நீருடன் சேர்ந்து நீர்த்து போகும் போது, இது ஒட்டுமொத்த அமைப்பை  மந்தமாக்கிவிடும். அதனால்,  உணவு வயிற்றிலேயே நீண்ட நேரத்திற்கு தங்கி, ஊட்டச்சத்தை உறிஞ்ச சிறு குடலுக்கு உணவு செல்லும் செயல்முறை தாமதமாகும்.

அதேபோன்று, உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால், எச்சில் நீர்த்து போகும். இது வயிற்றுக்கு பலவீனமான சிக்னல்களை அளிப்பதோடு மட்டுமல்லாமல், செரிமானத்தை  இன்னும் சிரமமாகி விடும்சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதால் செரிமான அமைப்பு நீர்த்து போவதால், ரக்க வேண்டிய செரிமான என்சைம்களின் அளவு குறைந்துவிடும். இதன் மூலம் செரிமானமாகாத உணவுகள் உங்கள் அமைப்பில் இறங்கி, அமில எதிர்ப்பால் நெஞ்சு எரிச்சலை உண்டாக்கும்.

உணவருந்தும் போது தண்ணீர் குடிப்பதால், உணவை சரியாக செரிக்க வைக்க முடியாமல், உணவில் உள்ள குளுகோஸ் பகுதியை கொழுப்பாக மாற்றி அதனை உடலில் தேக்கி வைத்துவிடும். இதன் பின் இந்த செயல்முறை அதிக அளவிலான இன்சுலினை  எதிர்ப்பார்க்கும். இதனால் உடலின் ஒட்டுமொத்த ரத்த சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்., இன்சுலின் அளவு அதிகரிப்பதால், கொழுப்புகள் உடலில் தேங்கிவிடும். இது உடல் பருமனுக்கும் காரணமாகிவிடுகிறதுஅதனால் உணவை அப்படியே விழுங்காமல் நன்றாக மென்று உண்ணுங்கள். உணவை மென்று உட்கொண்டால் அது செரிமான செயல்முறையை வேகமாக்கும்.  இது போக மென்று உட்கொண்ட உணவு உடைபடுவதற்கும் உட்கிரகித்துத் கொள்வதற்கும், செரிமானம் செய்வதற்கும் சுலபமாக இருக்கும்.

உணவருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பே தண்ணீர் குடியுங்கள். உடல் எடையை குறைத்து ஆரோக்கியமான மெட்டபாலிசத்தை உண்டாக்க வேண்டுமானால், உணவருந்தும் முன், அறை வெப்பநிலைக்கு ஏற்ப  நீரை ஒருவர் குடிக்க வேண்டும். இதனால் உணவருந்தும் போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற ஆவல் குறைந்து நல்ல செரிமானம் கிடைக்கும்