தீராத தலைவலி! ஒரே நாளில் அடுத்தடுத்து 15 மாத்திரைகள்! திருமணமான பெண்ணுக்கு நேர்ந்த விபரீத முடிவு!

பெங்களூரு: தலைவலி தொல்லையை சமாளிக்க ஒரே நேரத்தில் 15 மாத்திரைகளை விழுங்கிய பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.


பெங்களூருவைச் சேர்ந்தவர் முனேஷப்பா. இவரது மனைவி அனுசுயம்மா. இவர்களுக்கு, சோபா என்ற மகள்  உள்ளார். திருமணமான நாள் முதலாகவே, அனுசுயம்மா ஒரு பக்க தலைவலியால் கடும் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதற்காக, கடந்த 15 ஆண்டுகளாகவே அவர் மாத்திரை சாப்பிடுவதை வாடிக்கையாகச் செய்திருக்கிறார். சில நாள் முன்பாக, தலைவலி அதிகமாக இருந்ததால் 15 மாத்திரைகளை ஒரே நேரத்தில் அடுத்தடுத்து அனுசுயம்மா விழுங்கியுள்ளார்.

இதனால் உடனே மயக்கமடைந்த அனுசுயம்மாவை, அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். உயிரை காப்பாற்ற வேண்டிய மருந்தே எமனாக மாறிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.