ஏழு தலை நாகம் உரித்துப் போட்ட சட்டை? கோவில் அருகே கண்டெடுப்பு! நேரில் காண கூட்டம் கூட்டமாக திரளும் பக்தர்கள்!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கிராமத்தில் ஏழு தலை கொண்ட பாம்பின் தோலை கண்டு, அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் அனைவரும் ஆச்சரியத்தில் புரண கதைகளை நம்பி அங்கு கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து செல்வது மட்டுமின்றி வழிபாடு செய்ய தொடங்கியுள்ளனர்.


பெங்களூரு நகரிலிருந்து 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கனகாபுராவில் மரிகவுடனா டோடி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள கோவிலில் தினமும் காலையில் கோவில் வளாகத்தை சுத்தம் செய்வது வழக்கம். அந்த வகையில் சுத்தம் செய்து கொண்டிருந்த கோயில் ஊழியர் கோயில் வளாகத்திலிருந்து 10 அடி தூரத்தில் இந்த தோலை பார்த்துவுள்ளார். 

பின்னர் அந்த ஊழியர் ஊர் மக்களிடம் இதைப் பற்றி கூறியும் உள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் அனைவரும் அந்த தோலை ஏழு தலை பாம்பின் தோல் என்றும் எழு தலை பாம்பு அங்கு இருப்பதாகவும் நம்பி உள்ளனர். மேலும் புராண காலத்து கதைகளில் கூறப்படும், ஏழு தலை உடைய பாம்பு உண்மையில் இருக்கக்கூடும் என்று அந்த கனகாபுராவில் மரிகவுடனா டோடி கிராம மக்கள் நம்புகிறார்கள்.

இந்த தகவலை அறிந்த அடுத்து, நேற்றில் இருந்து அந்த கிராமத்திற்கு கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து செல்கின்றனர். சிலர் ஆர்வமிகுதியால் குங்குமம் தூவி வழிபாடும் நடத்துகின்றனர். 

ஏழு தலை கொண்ட பாம்பை குறித்து கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் தெரிவிப்பது.

பிரசாந்த் கூறுகையில், “சுமார் ஆறு மாதங்களுக்கு இதே போன்ற தோல் முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடத்திற்கு சிறப்பு சக்தி இருப்பதாக கிராம மக்கள் நினைத்து இங்கு ஒரு கோயில் கட்டினர்.

 கோவிலுக்கு அருகே பாம்பின் தோல் கிடந்து உள்ளது. காலையில் வளாகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த ஒரு கோயில் ஊழியர், பாலப்பா என்ற கிராமவாசியின் வயலில் தோலைக் கண்டார். கோயில் வளாகத்திலிருந்து 10 அடி தூரத்தில் கிடந்து உள்ளது”என்றார்.

உண்மையில் ஏழு தலை உள்ளதா? பாம்பு வல்லுநர்கள் கூறுவது.

உண்மையில் ஏழு தலை உள்ளதா? என்றால், நிஜத்தில் அப்படி ஒரு வகை பாம்பு கிடையாது என பாம்பு வல்லுநர்கள் கூறுகின்றனர். உலகில் எங்கும் ஏழு தலை பாம்பு குறித்த எந்த பதிவும் இல்லை. 

ஆனால், இரண்டு தலை பாம்புகள் உள்ளன, அவையும் மிகவும் அரிதானவையாகவே உள்ளன. அதுவும், மனிதர்களிடையே இணைந்த இரட்டையர்களைப் போலவே, சில பாம்புகளுக்கும் இரண்டு தலைகள் இருக்கும்,” என்று பாம்பு வல்லுநர்கள் கூறுகின்றார்.

பாம்பு ஒரு ஊர்வன இனத்தை சேர்ந்தது. பொதுவாக ஊர்வன இனத்தில் தோல் உதிரும் செயல்முறை என்பது பொதுவான ஒன்று, இந்த முறைக்கு எக்டிசிஸ் என்று அழைக்கப்படுகிறது. எக்டிசிஸ் முறையானது ஊர்வன இனத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

அந்த வகையில், பொதுவாக பாம்புகள் மூன்று வாரங்கள் முதல் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தோலை உரிக்கும். இந்த சாதாரண நிகழ்வு தான் கனகாபுராவில் மரிகவுடனா டோடி என்ற கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. ஆனால் பொது மக்கள் மூடநம்பிக்கையில் இதனை கண்டு ஏழு தலை கொண்ட பாம்பு உள்ளது என்று நம்பி உள்ளார்கள்.