ஏகப்பட்ட ஆண் தொடர்புகள்..! ஓயாமல் அபார்சன்..! சீரியல் கில்லர் ஜோலியின் யாரும் அறியாத மறுபக்கம்!

பல ஆண்களுடன் உடலுறவு கொள்வது, கருவுற்ற பின் அபார்ஷன் செய்வது, எதிர்ப்பவர்களை கொன்றுவிடுவது என 14 வருடங்களாக இதை ஒரு வேலையாகவே செய்து வந்துள்ளார் கேரள மாநிலத்தை சேர்ந்த பெண்.


தாய்மையை விட, பெண்மையை விட உயர்ந்தது எதுவுமில்லை என்று பெருமை பீத்திக்கொள்ளும் இந்த சமூகத்தில்தான் தினம் தினம் அப்பாவிக் குழந்தைகள் முறையற்ற உறவுகளால் கொல்லப்படுகிறார்கள். காதலனுடன் உடற்பசியை தீர்த்துக்கொள்ள குழந்தைகளுக்கு விஷம் வைத்துக் கொள்வது, கணவனை காதலனை வைத்தே தீர்த்துக் கட்டுவது, கண்டிக்கும் தம்பிக்கு கோழி குருமாவில் விஷம் வைத்து கொள்வது என நாள்தோறும் செய்தித்தாள்களில் வெளியாகும் பட்டியல் நின்றபாடில்லை.

சமூகத்தில் குழந்தைகள் பயந்து வாழ்வது போய், தாய் கொடுக்கும் பாலில் விஷம் இருக்குமோ என்ற குழந்தைகள் பயப்படும் காலம் வந்துவிடுமோ என அன்றாடம் வரும் செய்திகள் அச்சுறுத்துகிறது.  அந்த வகையில்தான் சொத்துக்காகவும், சுகத்துக்காகவும் கடந்த 14 ஆண்டுகளாக 6 பேரை கொலை செய்துள்ளார் கேரளப் பெண். 

கோழிக்கோடு மாவட்டம் கூடத்தொரை பகுதியில் ஜான் தாமஸ்-அன்னம்மா தம்பதி வசித்து வந்தனர். அவர்களின் உறவினர்கள் மேத்யூ, பீலி, குழந்தை அல்பன் என கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில் 2002 முதல் 2016 வரை இவர்கள் 6 பேருமே அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

ஆறு பேரின் சாவுமே ஒரே மாதிரியாக இருந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் இறந்து போனவர்களின் மறுஉடற்கூறு ஆய்வு செய்ததில் அனைவருமே விஷம் வைத்து கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் நடத்திய விசாரணையில் சொத்தை அபகரிக்க மருமகள் ஜோலி செய்த கொலைகள் என தெரியவந்தது.

அவரிடம் மேற்கொண்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் 5 பெண்களையும் கொலை செய்ய முயற்சியும் செய்துள்ளார் ஜோலி. சொத்துக்காகவும் காதலன் சாஜூவுடன் வாழவும்தான் இவை அனைத்தும் செய்துள்ளதாக தெரிகிறது. சாஜூவுடன் வாழ்வதற்காக அவரது மனைவியையும் தீர்த்துக் கட்டியது கூடுதல் தகவல்.