கணவரின் விபரீத ஆசை! கண்ணீர் ததும்ப ததும்ப வலியை பொருத்துக் கொண்டு நிறைவேற்றிய சீரியல் நடிகை!

கணவருக்காக வலியை பொறுத்துக் கொண்டு, சீரியல் நடிகை ஸ்ரீதேவி அழுதபடி செய்த காரியம் பாராட்டுகளை பெற்றுள்ளது.


சினிமா நடிகர்களை விடவும், சீரியல் நடிகர்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில், ராஜா ராணி,தங்கம், கல்யாணம் முதல் காதல் வரை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வருபவர் ஸ்ரீதேவி. இவர், நடிப்பு தவிர, நாய்களை பாதுகாக்கும் அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு அசோக் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர்,  சீரியல் நடிப்பை நிறுத்தவில்லை. இந்நிலையில், ஸ்ரீதேவியின் கணவருக்கு, தனது மனைவி மூக்குத்தி குத்த வேண்டும் என ரொம்ப நாள் ஆசையாம். இதை ஏற்றுக் கொண்ட ஸ்ரீதேவி, சமீபத்தில் மூக்கு குத்திக் கொண்டுள்ளார்.

அந்த காட்சியை வீடியோவாக எடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது டிரெண்டாகி வருகிறது. பலரும், கணவருக்காக, ஸ்ரீதேவி செய்த செயலை பாராட்டி கமெண்ட் பகிர்நது வருகின்றனர்.