சின்னத்திரை நடிகை நிலானிக்கு வெளிநாட்டில் வேலை செய்யும் ஒருவர் தொடர்ந்து செல்போனில் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, அவர் சென்னை வந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலனை இழந்த டிவி நடிகை! ஆதரவு தருவதாக நெருங்கிய வெளிநாட்டு என்ஜினியர்! சபலத்தால் சந்தி சிரிக்கும் பரிதாபம்!

சின்னத்திரையில் நடிகையாக இருப்பவர் நிலாணி. இவர் போரூரை அருகே தனது 2 குழந்தைகளுடன் கணவரை பிரிந்து வசித்து வருகிறார்.
இவர் ஏற்கனவே காந்தி லலித்குமார் என்பவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.இருவருக்கும் இடையே சண்டை காரணமாக, காந்தி தனது தற்கொலைக்கு நிலானி தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், நிலானியும் தற்கொலைக்கு முயற்சி செய்து தப்பினார்.
நீண்டநாட்களுக்கு பிறகு, நிலானிக்கும் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் மஞ்சுநாதன் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. மஞ்சுநாதனுக்கு ஏற்கனவே திருமணமானதை தெரிய வந்தவுடன் நிலானி அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். தொடர்ந்து செல்போனில் தொல்லை கொடுத்து வந்த மஞ்சுநாதன், தான் செலவு செய்த பணத்தை திரும்பத் தருமாறு நிலானியிடம் கேட்டுள்ளார். இதனை மறுத்த நிலானி காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார்.
இந்நிலையில் மஞ்சுநாதன் சென்னை திரும்பியபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.