படப்பிடிப்புகளில் நடிகர்களுடன் நெருங்கிப் பழக முடிவதில்லை: டிவி நடிகை ஏக்கம்!

சென்னை: சக நடிகர்களுடன் நெருங்கிப் பழக முடிவதில்லை என்று, நடிகை காயத்ரி பிரியா மனம்திறந்து பேசியுள்ளார்.


தமிழில், சுமார் 50க்கும் அதிகமான சீரியல்களில் நடித்தவர் காயத்ரி பிரியா. இவர், திருமணமான நிலையில், குடும்பத்திற்கு நேரம் ஒதுக்கும் வகையில், புதிய சீரியல்களில் நடிக்காமல் சில ஆண்டுகள், ஒதுங்கியிருந்தார். இந்நிலையில், அரண்மனைக்கிளி என்ற சீரியல் மூலமாக, விஜய் டிவியில் நடிக்க தொடங்கியுள்ளார். 

தனது ரீ-என்ட்ரி பற்றி ஊடகங்களில் பேட்டி அளித்த காயத்ரி பிரியா, ''நிகழ்ச்சித் தொகுப்பாளராக மீடியாவில் நுழைந்த எனக்கு, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பரபரப்பாக, பிசியாக நடித்து வந்த நான், ஒருகட்டத்தில், திருமணம் செய்துகொண்டு, செட்டில் ஆனேன். எனது கணவர் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.

அவருடன் மலேசியாவில் குடியேறிய நிலையில், எங்களுக்கு 2 குழந்தைகள் பிறந்தனர். இதையடுத்து, மீண்டும் என்னை சீரியலில் நடிக்கும்படி எனது கணவர் அறிவுறுத்தினார். இதற்காகவே, நாங்கள் சென்னைக்கு குடிவந்தோம். இதன்பேரில், எனக்கு அரண்மனைக்கிளி சீரியல் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இருந்தாலும், எனக்கு அதிக நண்பர்கள் கிடையாது. சில ஆண்டுகள் முன்பு வரை, சக நடிகர்களுடன் குளோசாக பழகுவோம். ஆனால், இப்போது யாரிடமும் மனம் விட்டுப் பேச முடியவில்லை. வேலை உண்டு, வீடு உண்டு என்றே நாட்கள் போகின்றன,'' என, காயத்ரி பிரியா குறிப்பிட்டுள்ளார். இவர் ஏக்கத்தில் குறிப்பிடுகிறாரா அல்லது வேறு எந்த எண்ணத்தில் குறிப்பிட்டுள்ளார் என்று புரியவில்லை.