உல்லாச வாழ்க்கைக்காக தகாத - தவறான செயல்! செம்பருத்தி சீரியல் நடிகர் சிக்கிய கதை!

ஆடம்பர வாழ்க்கைக்காக சீரியல் நடிகரான சயீப் அலிகான் மக்களை ஏமாற்றும் மோசடி வேலைகளில் ஈடுபட்டது தெரிய வந்ததையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்


சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மாணவ மாணவிகளின் கல்விச் செலவுக்காக என்று கூறி தனியார் தொண்டு நிறுவனத்தின் அடையாள அட்டையை கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டு இருவர் பணம் வசூலித்துக் கொண்டு இருந்தனர்.

அங்கு அப்போது தற்செயலாக வந்த தொடர்புடைய தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவரான அருண் குமார் என்பவர் அவர்கள் இருவரும் தங்களது தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதை கண்டுபிடித்தார்.

உடனடியாக அவர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்து விசாரித்தபோது அவர்கள் கோடம்பாக்கத்தை சேர்ந்த சைப் அலி கான் மற்றும் ராயப்பேட்டையை சேர்ந்த கௌதம் என தெரியவந்தது.

இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது நண்பர்களான அவர்கள் இருவரும் ஆடம்பர வாழ்க்கைக்காக மக்களிடம் பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்டு பணம் ஈட்டி வந்தது தெரியவந்தது.

மேலும் சைப் அலிகான் செம்பருத்தி, பகல் நிலவு உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருப்பதும் தெரியவந்தது இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்