சென்னை: நடிகை நீலிமா ராணி, அரண்மனைக்கிளி சீரியலில் இருந்து திடீரென விலகியுள்ளார்.
அரண்மனைக்கிளி சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய நீலிமா..! ஏன் தெரியுமா?
ரியசகி சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் நீலிமா ராணி. இவர், நான் மகான் அல்ல என்ற படத்தில் கார்த்தியின் தோழியாக நடித்து, மிகவும் பிரபலமானார். அதன்பின், ஏராளமான சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. செல்லமே, வாணி ராணி, தாமரை போன்ற சீரியல்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை. தற்போது, நீலிமா ராணி, அரண்மனைக்கிளி எனும் சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், திடீரென நீலிமா ராணி, அதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அந்த பதிவில், ''சிறு வயது முதலே கேமிரா முன்பாக நடித்து வந்தாலும், தற்போது சில தவிர்க்க முடியாத சூழல் காரணமாக, சீரியலில் இருந்து விலக நேரிட்டுள்ளது. எதிர்காலத்திற்கு திட்டமிட வேண்டியுள்ளது என்பதால், சில நாட்களுக்கு டிவி, சினிமா எதுவும் வேண்டாம் என்று இந்த முடிவை மேற்கொண்டுள்ளேன். நண்பர்கள், தோழிகள், சீரியல் குழுவினர் அனைவருக்கும் அன்பு கலந்த நன்றி,'' எனக் குறிப்பிட்டுள்ளார்.