பிரபல நடிகரின் 2வயது மகள் அகால மரணம்! பதற வைக்கும் காரணம்!

ஹிந்தியில் சின்னத்திரையில் நடித்து தனக்கு என ரசிகர்களை வைத்திருப்பவர் தான் பிப்ரதிஷ் வோரா


 இவர் பல பிரபலமான சீரியல்களில் நடித்து வருகிறார்.  "கிரைம் பெட்ரோல்" மற்றும் ட்ராக் மெஹதா கி உல்ட்டா சாஸ்மா " போன்ற சீரியல்கள் இவர் நடித்ததில் பிரபலமானவை.

பிரதிஷ் வோராவிற்கு 2 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அவள் எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் கடந்த 7-ம் தேதி உயிர் இழந்தார் . இவரது குழந்தை வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது, ஒரு பிளாஸ்டிக் விளையாட்டு பொம்மையை தெரியாமல் தனது வாயில் போட்டு கொண்டுள்ளார். அந்த பொம்மை இந்த சின்ன குழந்தையின் தொண்டையின் குறுக்கே சிக்கி கொண்டது. பின்பு அந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர்.

பிரதிஷ் வோரா அவரது ரசிகர்களிடம், தனது 2 வயது மகள் உயிர் பிழைக்க  வேண்டிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார் .  இருப்பினும் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த குழந்தையின் ஆன்மா சாந்தி அடைய பலரும் அவர்களுது பிராத்தனைகளை ஆண்டவனிடம் முன்வைத்தனர்.  மற்றும் பலர் அவர்களது ஆழ்ந்த இரங்கலைகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.