எடப்பாடி அரசை ஆட்டம் காண வைக்கும் செந்தில் பாலாஜி! குறிவைக்கும் வருமான வரித்துறை!

எடப்பாடி அரசை செந்தில் பாலாஜி ஆட்டம் காண வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் அவரை வருமான வரித்துறை குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று நூலிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வாய்ப்பை நழுவ விட்டது திமுக. ஆனாலும் கூட அதிமுக எம்எல்ஏக்கள் விலைபேசி அரசை கவிழ்க்க தீவிர முயற்சி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஸ்டாலின் வசம் 3 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் செந்தில் பாலாஜி மேலும் நான்கு எம்எல்ஏக்களை திமுக பக்கம் திருப்பி உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் மேலும் இரண்டு எம்எல்ஏக்கள் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாகவும் அதற்கு செந்தில் பாலாஜிதான் பொறுப்பேற்று இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன.

ஏற்கனவே அதிமுகவில் இருந்தபோது அக்கட்சியின் நிர்வாகிகள் உடன் தனக்கிருந்த தொடர்பை மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து சரியான நேரத்தில் விலகி திமுகவில் இணைந்து தற்போது மீண்டும் எம்எல்ஏ ஆகியுள்ள செந்தில் பாலாஜி அதிலுள்ள எம்எல்ஏக்களை தீர்த்து வருகிறார். இதனால் சில எம்எல்ஏக்கள் தாங்களாகவே செந்தில் பாலாஜியை தொடர்புகொண்டு யோசனை கேட்கின்றனர். இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு அவர்களை திமுகவில் சேர்க்கும் பணிகள் செந்தில் பாலாஜி ஆர்வம் காட்டி வருகிறார்.

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிசாமி செந்தில் பாலாஜிக்கு குடைச்சல் கொடுக்க காய் நகர்த்தி வருகிறார். கடந்த 2011 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் கரூரில் அன்புநாதன் என்பவர் வீட்டில் இருந்து கணக்கில் வராத பல கோடி ரூபாய் பணம் சிக்கியது. இந்த விவகாரத்தில் அப்போதே செந்தில்பாலாஜியின் பெயர் அடிபட்டது.

ஆனால் மீண்டும் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற தால் இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தப்பினர். தற்போது கரூர் அன்புநாதன் விவகாரத்தை எழுப்பி செந்தில் பாலாஜிக்கு சிக்கலை ஏற்படுத்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் செந்தில்பாலாஜிக்கு எதிராக அன்புடன் அவரிடம் வாக்குமூலம் பெறவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக சொல்கிறார்கள்.

இதன்மூலம் செந்தில்பாலாஜியின் கவனத்தை எம்எல்ஏக்களை வலைப்பதிவில் இருந்து நெருக்கடி பக்கம் திரும்பலாம் என்பது அதிமுகவில் வியூகம் என்கிறார்கள்.