டிரம்ப் பயணத்தில் அடித்தது ஜாக்பாட்! சென்செக்ஸ் மளமள சரிவு!

டிரம்ப் இந்திய பயணத்தின் சிறப்பாக இந்தியப் பங்குச் சந்தை சென்செக்ஸ் 806 புள்ளிகள் சரிந்தன. மேலும் உலோகம் மற்றும் ஆட்டோமொபைல் துறை சார்ந்த பங்குகள் வீழ்ச்சியந்தன.


சீனா மற்றும் தென் கொரியா, இத்தாலி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் இறப்புகள் அதிகரித்து வருவதால் உலக வளர்ச்சிக்கான கண்ணோட்டம் எதிர்மறையாக பயணிக்கிறது, இதன் காரணமாக இந்திய மற்றும் ஆசிய பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கியது . மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் காலை 662 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது.

டாடா ஸ்டீல் ஓஎன்ஜிசி மாருதி சுசூகி டாடா மோட்டார்ஸ் பஜாஜ் ஆட்டோ பங்குகள் செற்செக்ஸிலும். ஜேஎஸ்டபிள்யு வேதாந்தா டாடா ஸ்டீல் ஹிண்டால்கோ பார்தி இன்ஃராடெல் போன்ற நிறுவனங்களின் பங்குகள் நிஃடியிலும் சரிவுடன் தொடங்கியது.

மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகப்படியான முதலீடுகள் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில். வழக்கத்தை விட குறைவான முதலீடுகளே வந்துள்ளது. அதுமட்டுமின்றி அதிபர் டிரம்ப் பேசிக்கொண்டிருந்த போதே.

சர்தார் வல்லபாய் விளையாட்டு மைதானத்தில் இருந்த மக்கள் சாரை சாரையாக வெளியேறியதைக் கண்ட அரசு ஊழியர்கள் மற்றும் பாஜக கட்சியினர். மக்களை வெளியேற விடாமல் வாயிற் கதவுகளை அடைத்துவிட்டனர். இவ்வளவு களேபரத்திற்கும் இடையே‌ அமெரிக்க அதிபரின் உரை வீச்சு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மணியன் கலியமூர்த்தி