அஜித்துக்கு நடிக்க தெரியாது ! அதிஷ்டத்தால் காலத்தை ஓட்டுகிறார்! உடன் நடித்த நடிகர் துணிச்சல் பேட்டி!

3 மாதங்களுக்கு முன்பு நடிகர் ப்ரித்விராஜ், நம்ம "தல" அஜித் பற்றி பேசிய ஒரு சில கருத்துக்கள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


பொதுவாக அனைவருமே தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான அஜித் பெருமையாக தான் பேசுவார்கள். காரணம் அவர் மற்றவர்களிடம் காட்டும் அன்பும் பாசமும் தான். எவரையும் சமமாக பார்க்கும் குணம் படைத்தவர் நடிகர் அஜித் குமார். இவருக்கு  என்று  மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே தமிழ் திரையுலகில்  உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இத்தகைய நல்ல குணங்கள் கொண்ட ஒரு நடிகரை, பப்லு  என்று அழைக்கப்படும் நடிகர் ப்ரித்விராஜ், தவறான முறையில் விமர்சனம் செய்த சம்பவம் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் ப்ரித்விராஜ், தமிழில் மட்டும் இல்லாமல் பல மொழி திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்த நடிகர் பிரபலமடைந்த மாபெரும் நடிகரை பற்றி இப்படி விமர்சிப்பது சரியா என பலரும் கேள்வி எழுப்பினர்.

3 மாதங்களுக்கு முன்பு நடிகர் ப்ரித்விராஜ், பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அங்கு நடைபெற்ற நேர்காணலில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. கடைசியாக நடிகர் அஜித் பற்றியும் கேட்கப்பட்டது.  அஜித்தும் ப்ரித்வியும் இணைந்து பல படங்கள் நடித்து உள்ளனர். 

ஆகையால் தல அஜித்தின் பாசிட்டிவ் மற்றும் நெகடீவ்ஸ் பற்றி கூறுங்கள் என்று நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேட்டார். இந்த கேள்விக்கு சற்றும் யோசிக்காமல் பதில் அளித்த நடிகர் ப்ரித்வி, அஜித்தின் பாசிட்டிவ் சைடு பற்றி பேச ஆரம்பித்தார். "நடிகர் அஜித் மிகவும் எளிமையாக அனைவருடனும் பழகும் தன்மை உடையவர். ரொம்ப ஸ்டைலான மற்றும் கூலான மனிதன்" என்று கூறினார்.

இதற்கு பின் நெகடிவ் பற்றி பேச ஆரம்பித்தார், "அஜித்திற்கு நடிப்பின்  மீது சிறிது அளவு கூட அர்ப்பணிப்பு கிடையாது அதுமட்டும் இல்லாமல் அவருக்கு நடிக்கவே பிடிக்காது" என்றும் கூறினார். மேலும் பேசுகையில்  "அதிஷ்டத்தின் அடிப்படையில் தான் அவர் இன்னமும் தமிழ் சிமாவில்  ஜொலிக்கும் நட்சத்திரமாக திகழ்கிறார்" என்றார்.

இவர் கூறிய இந்த பதில் அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.  இந்த சம்பவம் நடந்து 3 மாதங்கள் ஆன பின்பு , தற்போது இந்த வீடியோ பதிவு இணையத்தில்  தீயாய் பரவி வருகிறது.  இதனை பார்த்த அஜித்தின் ரசிகர்கள் பெரும் கோபத்திற்கு உள்ளாகி  நடிகர் ப்ரித்வியை கண்டபடி கமெண்ட் செய்து வருகின்றனர்.