பா.ஜ.க. இயக்கம் டெல்லிக்கு ராஜாவாக இருந்தாலும், தமிழகத்தில்..? செல்லூர் ராஜூ அதிரடி!

தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று தொடர்ந்து பா.ஜ.க. தலைவர்கள் எக்குத்தப்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி அமையும்’ என்று உறுதிபட கூறியிருந்தார்.


தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் இன்று பேசுகையில், ‘தமிழகத்தில் பா.ஜ.க. நல்ல வளர்ச்சி அடைந்துவருகிறது. அடுத்த தேர்தலில் ஜார்ஜ் கோட்டையை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அலங்கரிப்பார்கள், இது உறுதி என்று கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளிப்பது போன்று பேசினார் அமைச்சர் செல்லூர் ராஜூ. ‘பா.ஜ.க. இயக்கம் டெல்லிக்கு ராஜாவாக இருந்தாலும், தமிழகத்தில் ஏதேனும் ஒரு திராவிடக் கட்சியில்தான் சவாரி செய்ய முடியும். தமிழகத்தில் இன்னும் வளர்ச்சி அடையவில்லை’ என்று போட்டுத் தாக்கியிருக்கிறார்.