கமலுடன் செல்ஃபி! அடித்து மல்லுக்கட்டிய இரண்டு பெண்கள்! வைரல் வீடியோ!

மக்கள் நீதி மையம் தலைவர் கமலுடன் செல்பி எடுத்துக் கொள்ள வந்த இரண்டு பெண்கள் அடித்து மல்லுக்கட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.


புதுச்சேரியில் மக்கள் நீதி மையம் கட்சியின் அலுவலகம் திறப்புவிழா நடைபெற்றது. அலுவலக திறப்பு விழாவிற்கு பிறகு கமல் கட்சி தொண்டர்களுடன் செல்பி எடுத்துக் கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

கமலுடன் செல்பி என்று அறிவிக்கப்பட்டதும் அங்கிருந்த கட்சித் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் கட்சி அலுவலகத்திற்குள் நுழைய ஆரம்பித்தனர். அப்போது 300 பேருக்கு மட்டுமே அனுமதி என்று கூறி நிர்வாகிகள் மற்றவர்களை அதிர வைத்தனர்.

இதனால் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று பதறிய பெண்கள் வேகவேகமாக கட்சி அலுவலகத்திற்குள் நுழைய ஆரம்பித்தனர். அப்போது பெண் ரசிகை ஒருவர் மற்றொரு ரசிகையின் காலை மிதித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த ரசிகை காலை மிதித்து அரசு கையை சரமாரியாக அடிக்க தொடங்கினார். பதிலுக்கு காலை விரித்த ரசிகையும் அந்த ரசிகையை விளாச ஆரம்பித்தார். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் மாறியது.

கமலுடன் செல்பி எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்றபோது ரசிகைகள் இருவர் கால்களை மிதித்துக்கொண்டே ஒருவருக்கு ஒருவர் அடித்து மல்லுக்கட்டிய அங்கிருந்து நிர்வாகிகளை அதிர வைத்தது. உடனடியாக போலீசார் அங்கிருந்த மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகளும் அந்த இரு பெண்களையும் விளக்கி ஒரு வழியாக வெளியே அழைத்துச் சென்றனர்.