கோட் போட்ட எடப்பாடியை கேலி செய்தால் சீமான் தாங்க மாட்டாராம்! என்னாப்பா திடீர் பல்டி? நீங்கதான் அ.தி.மு.க. பி. டீமா?

நான் ஒரு ஏழை விவசாயி என்று எடப்பாடி பழனிசாமி பேசுவதை அநியாயத்துக்கு கிண்டல் செய்தவர் நாம் தமிழர் சீமான்.


ஆனால், அவர் இன்று திடீரென எடப்பாடிக்கு ஆதரவாக குரல் கொடுப்பதைப் பார்த்து, அவரது தம்பிகளே அதிர்ந்து நிற்கிரார்கள். ஏனென்றால், இப்போது சமூக வலைதளங்களில் எடப்பாடியும் விஜயபாஸ்கரும் கோட் போட்டுக்கொண்டு வெளிநாட்டவர்களுடன் இருக்கும் படம்தான் வைரலாகிறது.

ஒவ்வொரு நபரும் ஒரு மாதிரி கிண்டல் செய்துவருகிறார்கள். இந்த நிலையில்தான் எடப்பாடிக்குத் திடீரென ஆதரவு தெரிவித்துப் பேசியிருக்கிறார் சீமான். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும் முதலமைச்சர் பழனிசாமியை கேலி செய்து இழிவுப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார்.

லண்டன்- அமெரிக்க நாடுகளில் குளிர் அதிகம் என்பதால் கோட்டு சூட்டு போட்டு கொண்டிருப்பதில் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பினார். அந்நாட்டுக்கு ஏற்ற உடைகளை அணிந்துள்ள முதல்வரை கேலி செய்வது தவறானது என்றும் அவர் தெரிவித்தார்.

பெருந்தலைவர் காமராஜர் வெளிநாடுகளுக்கு வேட்டி- சட்டையுடன் போனது பெருமைக்குரியது என்றார். ஆனால் பழனிச்சாமியை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.

தி.மு.க.வை மட்டுமே எதிர்த்துப் பேசும் சீமானை, அ.தி.மு.க.வின் பி டீம் என்று பலரும் விமர்சித்துவந்த நேரத்தில், இப்படி ஒரு கருத்து கூறியிருப்பது அவரது தம்பிகளை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.