திரைப்பட நடிகர் இரஜினிகாந்த் ஒரே படத்துக்கு சரக்கு மற்றும் சேவை வரியுடன் 126 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தகவலி வெளியிட்டுள்ளார்.
ஒரு படத்துக்கு ரஜினியின் சம்பளம் 126 கோடி ரூபாய். ஏன் அங்கே ரெய்டு இல்லை? கொந்தளிக்கும் சீமான்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று மதியம் சந்தித்துப் பேசிய அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோதே இதைத் தெரிவித்தார். காவிரிப் பாசனப் பகுதியில் ஐட்ரோகார்பன் திட்டங்களைச் செயல்படுத்துவதை நிறுத்தி, அதை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தியதாகத் தெரிவித்தார். கோரிக்கையைப் பரிசீலிப்பதாக முதலமைச்சர் கூறினார் என்றார் சீமான்.
நடிகர் விஜய் வீட்டில் தேடுதல் நடத்தப்படுகிறதே.. கருப்புப்பணம் அதிகமா புரளுதே..அதை வட்டிக்கு விடுவதாக வருமான வரித் துறை கூறியுள்ளதே என்று கேட்டதற்கு, “ விஜயைவிட அதிகமா சம்பளம் வாங்குறவரு யாருன்னு தெரியும்.. ஒரு படத்துக்கு மட்டுமே 126 கோடி... சரக்கு மற்றும் சேவை வரியோட வாங்கியிருக்கிறாரு.
அடுத்த படத்துக்கும் வாங்கியிருக்கிறாரு... அவர் வீட்டுக்கு ஏன் நீங்க போறதில்லை? 66 இலட்சம் தண்டம் கட்டணும்.. அதையே தேவையில்லைங்கிறீங்க.. ” என்று பாகுபாடு காட்டப்படுவதாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.