அமீர்கானுக்கே குரல் குடுக்காத நீ யாருக்குய்யா குரல் குடுப்பே..? ரஜினியை வைச்சு செய்யும் சீமான்.

இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் அதற்காக போராடும் முதல் ஆளாக நான் இருப்பேன் என்று ரஜினிகாந்த் சொன்ன விவகாரம் படு வைரலாக பேசப்படுகிறது. இந்த நிலையில் நாம் தமிழர் சீமான் இன்று ரஜினிக்கு கடுமையாக விமர்சனம் வைத்திருக்கிறார்.


முன்னாள் குடியரசுத்தலைவர் பக்ருதீன் அலி அகமதுவின் குடும்ப உறுப்பினர்களது குடியுரிமையும், கார்கில் போரில் பங்கேற்ற முன்னாள் இராணுவ வீரர் முகமது சனாவுல்லாவின் குடியுரிமையும் தேசியக் குடிமக்கள் பதிவேட்டால் அஸ்ஸாமில் பறிக்கப்பட்டுள்ளதற்குக் குரல் கொடுத்தீர்களா? 

மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி தாத்ரியில் இக்லால் எனும் முதியவரை இந்துத்துவ வெறியர்கள் அடித்தே கொன்றதற்குக் குரல் கொடுத்தீர்களா?

ஜெய்ஸ்ரீராம் எனக் கூறக்கோரி 15 வயது இசுலாமிய சிறுவன் உத்திரப்பிரதேசத்தில் காவிப்பயங்கரவாதிகள் எரித்துக்கொன்றதற்குக் குரல் கொடுத்தீர்களா?

காஷ்மீரில் ஆசீபா எனும் குழந்தை கோயிலுக்குள் வைத்துக் கூட்டு வன்புணர்ச்சி செய்யப்பட்டதற்குக் குரல் கொடுத்தீர்களா?

அமீர்கான் போன்ற உச்சபட்ச திரை நட்சத்திரங்களே இசுலாமியர் என்பதால் அச்சுறுத்தலுக்கு உள்ளானபோது குரல் கொடுத்தீர்களா? எதற்குத்தான் குரல் கொடுப்பீர்கள்? எப்போதுதான் வாய்திறப்பீர்கள்?