அழகான வேட்பாளர் தமிழச்சி முன்பு அடக்க ஒடுக்கமாக பம்மிய சீமான்! வைரல் புகைப்படம்!

திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்று அரசியல் களத்துக்கு வந்தார் சீமான். அவர் பேசிய தமிழும், சொன்ன கருத்துகளும் இளையவர்கள் மனதை கொள்ளை கொண்டன என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.


அதே நேரம், வெளிநாடுகளில் இருந்து பணம் வாங்கி ஏமாற்றுகிறார், கட்டப்பஞ்சாயத்து செய்யும் நபர்களுக்கு பதவி கொடுத்துள்ளார் என்றெல்லாம் சொல்லப்பட்டது அத்தனையும் உண்மை என்பது போல் ஆடியோக்கள் வரிசையாக வந்து கொட்டி வருகின்றன.

பெண்களுக்கு மரியாதை கொடுப்பதில் சீமானுக்கு நிகர் சீமான் என்று அவரது அன்புத் தம்பிகள் புகழ்வது போன்று, சென்னையின் அழகான வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியின் முன்பு என்னமா பம்மியிருக்கிறார் என்பதைப் பாருங்கள். ஆனால், அந்த புகைப்படத்துக்கு மிகச்சரியான மீம்ஸ் படமாக, செந்தில் கோவை சரளாவைப் போட்டு அட்டகாசப் படுத்தியிருக்கிறது தி.மு.க.வின் ஐ.டி. விங்க்.

ஏனென்றால், இவர் மீது நடிகை விஜயலட்சுமி எப்படியெல்லாம் குற்றச்சாட்டுகள் வைத்தார், அவர் வாயை மூடுவதற்கு பெங்களூரில் வீடு வாங்கிக் கொடுத்ததெல்லாம் உடன் இருக்கும் அத்தனை பேருக்கும் தெரிந்த சமாச்சாரம்தான். இந்த நிலையில் கெட்ட வார்த்தை ஆடியோ குறித்த அவரிடம் கேள்வி எழுப்ப முயன்றவர்களுக்கு அவர் பதில் தரவே இல்லை. ஏனென்றால், அவரை யாரும் கேள்வி கேட்கவே கூடாதாம். அப்படி கேள்வி கேட்க வேண்டும் என்றால் எடப்பாடி, ஸ்டாலின் போன்றவர்களைக் கேள்வி கேட்டுவிட்டு அதன்பிறகுதான் அவருக்கு வர வேண்டுமாம்.

நல்லா சொல்றாருய்யா டீட்டெய்லு.