மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசணுக்கு துணை நிற்பது நம் கடமை… சீமான் ஆவேச அழைப்பு.

இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவரும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசணுக்குத் துணையாக நிற்கவேண்டியது கடமை என்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீமான் அழைப்பு விடுத்துள்ளார்.


பல நூற்றாண்டுகளாய் மறுக்கப்பட்ட கருத்துரிமை, 1947க்கு பிறகான சுதந்திர இந்திய ஒன்றியத்தில் பெயரளவிலேனும் நிலைநாட்டப்பட்டதாக நம்பிக்கொண்டருந்த வேளையில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் அவர்களின் மீதான நீதிமன்ற அவமதிப்பு தண்டனை விரும்பத்தகாத ஒன்று.

நீதித்துறை மீதான எண்ணற்ற இளையோர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் பிராசந்த் பூசண் அவர்களோடு துணை நிற்பது சனநாயகத்தின் மீதும், அதனை அங்கீகரிக்கும் அரசியல் சாசனம் மீதும் நம்பிக்கை வைத்துள்ள ஒவ்வொருவரின் கடமை.

இதுவரை ஏழைகளின் குரலாகவும், ஒடுக்கப்பட்டவர்களின் தோழனாகவும் வலம் வந்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் அவர்கள் மேலும் உறுதியோடு இயங்க, நாம் உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதே இன்றைய தேவை என்று கூறியிருக்கிறார்.