ஜக்கியுடன் போட்டி போடும் சீமான்! எங்கே பார்த்தாலும் மரம் கொள்ளை?

ஒவ்வொரு நபரும் 42 ரூபாய் கொடுங்கள், நான் இந்த பூமியை பச்சையாக்கிக் காட்டுகிறேன் என்று ஜக்கி வாசுதேவ் ஆசை காட்டி வருகிறார்.


காவிரியின் கூக்குரல் என்று அவர் ஹைடெக்காக ஊர் சுற்றுக்கொண்டு இருக்க, அவருக்க்ப் போட்டியாக நாம் தமிழர் சீமானும் களம் இறங்கிவிட்டார்.

நாம் தமிழர் கட்சியின் பத்தாண்டு பசுமைத் திட்டம் மற்றும் பல கோடி பனைத் திட்டங்களின் முன்மாதிரி முன்னெடுப்பாக தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கில் பனை விதைகளை விதைக்கும் பணிகளை நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து செய்து வருகிறார்கள். அதன்படி, ஒரே நாளில் பத்து லட்சம் பனை விதைகளை நடவு செய்யும் நிகழ்வினை, பனைத் திருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள்.

ஜக்கி என்னடான்னா 12 வருடத்தில் 242 கோடி மரங்கள் நடப்போகிறேன் என்று கிளம்பியிருக்கிறார். இந்தப் பக்கம் சீமான் தினமும் 10 லட்சம் பனை மரங்கள் நடப்போகிறோம் என்கிறார்.

இப்படி எல்லோரும் எல்லா இடங்களிலும் மரங்களா நட்டுக்கிட்டு இருந்தா என்னங்க அர்த்தம்? இப்ப கொள்ளை அடிக்கிறதுக்கு புது டிரெண்டா மரங்களை பயன்படுத்துறீங்களே, இதெல்லாம் நல்லதுக்கு இல்லைப்பா...