டாக்டர் ஷாலினிக்கு சீமானின் தம்பிகளின் செக்ஸ் டார்ச்சர் அக்கப்போர்!

பெண்கள் தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவது குறித்த விஷயம் பற்றி டாக்டர் ஷாலினி ஒரு தகவலைக் குறிப்பிட்டார்.


அதாவது 33 சதவிகிதம் 50 சதவிகிதம் என்று பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தாலும், பெண்களை முன்னே வைத்து ஆண்கள்தான் அரசியல் செய்கிறார்கள் என்ற உண்மையைச் சொன்னார். அதேபோன்று நாம் தமிழர் கட்சியில் 50 சதவிகிதம் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டது குறித்து, ‘அவர்கள் தலைவனின் பேச்சில் மயங்கி தேர்தலில் நிற்கிறார்கள் என்று குறிப்பிட்டார். அவர்களால் ஜெயிக்க முடியாது என்பதால் தைரியமாக சீமான் நிறுத்தியிருக்கிறார் என்பதுதான் ஷாலினி சொல்லவந்த கருத்து.

இந்த விஷயத்தை ஷாலினி சொன்னதும் நாம் தமிழர் கட்சியின் தம்பிகளுக்குத்தான் எத்தனை கோபம். கெட்ட கெட்ட வார்த்தைகளில் ஷாலினியை கேவலமாக பேசி, திட்டி எத்தனை முடியுமோ அத்தனை தூரம் அவமானப்படுத்திவிட்டனர்.

ஒருவர் அதுவும் மருத்துவராக இருக்கும் ஒருவர் விமர்சனம் செய்கிறார் என்றால், என்னவென்றுகூட விளக்கம் கேட்காமல் கேவலமாக திட்டுவதுதான் நாம் தமிழர் மரபா என்பதை சீமான் தெளிவாக விளக்க வேண்டும்.

ஏனென்றால்,  நாம் பேசும் ஒரே வார்த்தைக்கு இடத்துக்குத் தக்க பல்வேறு அர்த்தம் இருக்கும் என்று சொன்னபிறகும் அவருக்கும், அவரது  உதவியாளர்களையும் தேடிக் கண்டுபிடித்துத் திட்டி வருகிறார்கள். 

இதையெல்லாம் சீமான் கேட்க மாட்டாரா என்று அவரது கட்சியின் முக்கிய நிர்வாகியிடம் கேட்டோம். 

அட, திட்டச் சொல்றதே சீமான் தான் என்கிறார் அவர். விளங்கிடும்.