எடப்பாடியாரை சீண்டிய சீமான்..! தேர்தல் முடிந்த பிறகு கம்பி எண்ணப்போவது உறுதி..! அடித்துச் சொல்லும் போலீஸ்!

ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தில் விவகாரமான கருத்துக்களை சொன்னதன் காரணமாக சீமான் மீது இரண்டு பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில், இடைத்தேர்தல் நடக்கும்போது தேவை இல்லாத பிரச்னை வேண்டாம் என்று காவல் துறை காத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்று முதல்வர் எடப்பாடியையும் அவரது கூட்டாளிகளையும் வருணித்திருந்தார் சீமான். இந்த விவகாரம் ஆளும் கட்சியை மிகவும் டென்ஷன் ஆக்கியிருக்கிறது. சீமானை கைது செய்யவில்லை என்றால், இவரைப் போலவே பலரும் பேசத்தொடங்கி விடுவார்கள் என்று பயப்படுகிறது அரசு.

அதே நேரம் இடைத்தேர்தல் இருப்பதால், இப்போது அரஸ்ட் செய்வது சரியாக இருக்காது என்பதால் திங்கள் அல்லது செவ்வாய் கைது செய்ய திட்டமிட்டு இருக்கிறதாம். சீமான் கைது ஆனால் ஏதாவது சட்டம் ஒழுங்கு பிரச்னை வருமா என்றும் பார்க்கிறார்களாம்.

அப்படியெல்லாமா நடக்கும்?