திருமாவுடன் சீமான் கூட்டணி! தேர்தல் ரிசல்டுக்கு பிறகு செம ட்விஸ்ட்!

இன்று ஆளும் கட்சியான அ.தி.மு.க.வோ அல்லது மத்தியில் ஆளும் பா.ஜ.க.வோ சீமானுக்கு ஒரு பொருட்டே இல்லை. அவரது முழு குறிக்கோளும் ஸ்டாலினைத் திட்டுவதுதான். அவரை திட்டினால் கூட்டமும் வெகுவாக ரசிக்கிறது என்பதால் விழுந்துவிழுந்து திட்டுகிறார்.


அதனால் சீமானுக்கு இப்போது கடுமையாக பதிலடி கொடுக்கிறது முரசொலி. எங்களிடம் பிச்சை எடுத்து வாழும் உனக்கே இந்தக் கொழுப்பா என்ற ரீதியில் கண்டனம் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால், முன்பு தி.மு.க.விடம் கைகட்டி காசு வாங்கினார் சீமான்.

இப்போது ஏன் திடீரென ஸ்டாலினைத் திட்டுகிறார் என்று கேட்டால், எல்லாம் திருமாவளவனுக்காக என்று சொல்கிறார்கள். திருமாவை வேறு எந்தத் தொகுதி பிரசாரத்துக்கும் செல்லக்கூடாது என்று ஸ்டாலின் தடை போட்டுவிட்டார். அதேபோன்று நடக்க இருக்கும் நான்கு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அவரது பரப்புரை பயன்படவில்லை. அதனால் கோபத்தில் இருக்கும் திருமா, தேர்தல் ரிசல்ட்டுக்குப் பிறகு கூட்டணியில் இருந்து கழன்றுகொள்ளும் முடிவில் இருக்கிறாராம்.

கொள்கை ரீதியில் திருமாவுடன் இணைந்து செயல்படுவதில் சீமானுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்பதால், வரும் சட்டமன்றத் தேர்தலை இருவரும் சேர்ந்து சந்திக்க இருக்கிறார்களாம். அதனாலே திருமாவுக்காக ஸ்டாலினைத் திட்டுகிறார் என்று சொல்கிறார்கள். ஆனால், தி.மு.க. பக்கத்திலோ, ‘ஆளும் கட்சியிடம் தேர்தலுக்கு பெரிய அளவுக்குப் பணம் வாங்கியிருக்கிறார். அ.தி.மு.க.வின் அறிவிக்கப்படாத கூட்டணிக் கட்சி நாம் தமிழர்’ என்கிறார்கள். என்னமோ நடக்குது, ஆனா, சண்டை நல்லா இருக்குது.