பாடப்புத்தகம் அளவுக்கு என்னய்யா செஞ்சீரு? ரஜினியை டார் டாராக்கிய சீமான்!

யாரையாவது சீண்டிப் பார்க்காமல் சீமானுக்குத் தூக்கம் வராது. அந்த வகையில் இப்போது சீமான் திட்டியிருப்பது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை.


ஐந்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் ரஜினிகாந்த் பற்றி, உழைப்பால் உயர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்துக்குத்தான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் சீமான். அவர் என்ன சுதந்திரப் போராட்ட வீரரா அல்லது உழைப்பால் உயர்ந்த உத்தமரா என்று சீறியிருக்கிறார். சிகரெட்டை தூக்கிப் போட்டு, வாயில் கேட்ச் செய்தவர் என்பதால், மக்களுக்கு ரஜினி என்றாலே அந்த இமேஜ்தான் இருக்கிறது.

உண்மையான சுதந்திரப் போராட்ட வீரர்கள், நாட்டுக்காக சேவை செய்தவர்கள், தனக்கென எதையும் சேர்த்துவைக்காமல் உழைத்த உத்தமர்கள் பற்றித்தான் படிக்க வேண்டுமே தவிர, இப்படிப்பட்ட சினிமா கலைஞனை போடக்கூடாது என்று கொந்தளித்திருக்கிறார். இதனால், சினிமாவை நம்பி ஓடிவரும் சிறுவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அச்சமும் தெரிவித்திருக்கிறார். சரியாத்தான் பேசுறாரா சீமான்?