மர்மத்தீவை தேடி அலையும் பாகிஸ்தான் மக்கள்!

கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் 25 ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக. பாகிஸ்தானின் மற்ற பகுதிகளான கராச்சி. லர்கானா மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் 7.7 ரிக்டர் அளவுகளில் பதிவானது.


இந்த நிலநடுக்கத்தின் விளைவாக பாகிஸ்தானின் கடலோர நகரமான குவாடர் கடற்கரையிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் திடீரென ஒரு புதிய தீவு உருவாகியுள்ளதைக் கண்டு மிரண்டு போயினர் அந்த பகுதி மக்கள். 

பிறகு சில படகுகள் மூலம் அந்த புதிய தீவுக்கு சென்றவர்கள் முட்டை வடிவத்தில் சுமார் 295 அடி நீளமும் 20 அடி உயரமும் கொண்ட இந்த தீவு முழுவதும் மீன்கள் செத்து கிடந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.

பூகம்பத்தின் போது டெக்டோனிக் தகடுகள் மோதியதால் இந்த தீவு உருவானதாக விஞ்ஞானிகள் கூறினாலும் சுற்றிலும் தண்ணீர் மட்டுமே இருந்த இந்த இடத்தில் திடீரென எப்படி இந்த தீவு உருவானது என்ற குழப்பத்தில் ஆழ்ந்து போயுள்ளனர்.

கேட்பதற்கு சற்று வித்தியாசமாக இருந்தாலும் இது முற்றிலும் உண்மையான செய்தி என்பது அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தீவு முழுவதும் மண், மணல், கற்கள் நிறைந்திருப்பதை பார்த்த மக்கள். பல இடங்களிலிருந்து மீத்தேன் வாயுவும் வெளியே வந்து கொண்டிருந்தைக் கண்டு அச்சப் பட்டு தீப்பெட்டியை கொண்டு பற்ற வைத்த போது, ​​திடீரென தீவு முழுவதும் பரவியிருந்த மீத்தேன் வாயு தீப்பிடித்தது.

ஆனால் சிறிது நேரத்தில் தானாக அனைந்து விட்டதாக கூறுகின்றனர் அதைப் பார்த்த மக்கள். பூகம்ப மலை என்று அழைக்கப்பட்ட அந்த தீவினை பற்றி ஆராய்ச்சி செய்த நாசா இந்த தீவினை செயற்கைக்கோள் மூலம் தேடிய போது. அப்படியொரு தீவினை பார்க்க முடியவில்லை என்று தெரிவித்தது.

அமெரிக்காவின் அறிக்கையை எடுத்துக்கொண்டு அந்தப் பகுதிக்கு விரைந்த பாகிஸ்தான் விஞ்ஞானிகள் அந்தத் தீவு இருந்த இடத்தைப் பார்த்து அந்த தீவு கடலில் இருந்து மறைந்துவிட்டதைக் கண்டு அதிர்ச்சியில் சொல்வதரியாது திகைத்து வருகின்றனர் .  

மேலும் அந்த தீவு எங்கே போனது என்று மக்கள் பயத்தில் உறைந்து போயுள்ளனர். கடந்த 6 ஆண்டுகளாக காணப்பட்ட ஒரு தீவு திடீரென மறைந்துவிட்டதைக் கண்டு இதனால் எதிர்காலத்தில் வேறு ஏதாவது பெரிய ஆபத்து ஏற்படுமோ என்று அச்சத்தில் உள்ளனர் அந்த பகுதியில் உள்ள மக்கள்.