இளமை குறையாத கொரியன் பெண்களின் அழகு ரகசியம் தெரிஞ்சிக்கணுமா?

அவர்களின் அழகின் ரகசிய முறைகள் உங்களுக்கு தெரிந்து இருந்தால் போதும் நீங்களும் கொரியன் பெண்கள் போல் இளமையாக ஜொலிக்கலாம். தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள்.


கொரியன் பெண்கள் தினமு‌ம் தங்கள் முகத்தை சுத்தம் செய்ய ஆயில் க்ளீன்சர் பயன்படுத்துகின்றனர். இந்த ஆயில் க்ளீன்சர் நமது முகத்தில் தேங்கியுள்ள எண்ணெய் பசையை போக்கி சருமத்தை பொலிவாக்கும். அதுமட்டுமல்லாமல் முகத்தில் உள்ள ஆயில் மேக்கப், சன்ஸ்க்ரீன், மஸ்காரா போன்றவற்றையும் இதைக் கொண்டு எளிதாக நீக்கி விடலாம். எனவே உங்கள் மேக்கப்பை ரிமூவ் செய்ய இது உதவியாக இருக்கும்

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குதல் என்பது கொரியன் பெண்களின் முக்கியமான பராமரிப்பு. இப்படி நமது தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கும் போது சருமம் புதுப்பிக்கும். ஆனால் இதை தினமு‌ம் செய்யக் கூடாது. சென்ஸ்டிவ் சருமம் உடையவர்கள் இதை வாரத்திற்கு 1-2 தடவை செய்தால் போதும் நல்ல பலன் கிடைக்கும். கடினமான சருமம் உள்ளவர்கள் இதை அடிக்கடி செய்து கொள்ளலாம். 

கொரியன் பெண்கள் சருமத்தை நன்றாக சுத்தம் செய்த பிறகு சருமத்தை மாய்ஸ்சரைசர் செய்கிறார்கள். இதற்கு டோனர் பயன்படுத்தி சருமத்திற்கு போஷாக்கு அளிக்கிறார்கள். கொரியன் பெண்கள் பயன்படுத்தும் டோனர் நாம் பயன்படுத்தும் அஸ்ட்ரிஜெண்ட் டோனர் கிடையாது. மாறாக இது சருமத்திற்கு நல்ல தக்காளி பழத்தை போன்ற சிகப்பழகை தரக் கூடியது.